Monday, 22 August 2022

I AM OFF


 

GOING  TO  DELHI  TODAY .  WILL  BE  BACK  ON  27-08-2022

ஏழு வகை கோவில்கள் - 3

 இளங்கோவில்

பழைய கோவிலை சீரமைக்கும் பொழுது அருகில் ஒரு சிறு கோவில் கட்டி அதில் இறைவனை எழுந்தருளச் செய்து, பிறகு கோவிலின் சீரமைப்பு பணியினைத் தொடங்குவர். இவ்வாறு கட்டப்படும் சிறு கோவில்களுக்கு இளங்கோவில் என்பது பெயராகும். பெரும்பாலும் இக்கோவில்கள் நான்கு பட்டையுடைய விமானங்களைக் கொண்டிருக்கும். இவ்வகையில் இளங்கோவில் கட்டும் மரபு இன்றும் வழக்கத்தில் உண்டு. இதனை பாலாலயம் செய்தல் எனக் கூறுவர். இது போன்ற இளங்கோயில்கள் திருமீயச்சூர், மற்றும் கீழைக் கடம்பூரிலும் உண்டு எனக் கூறப்படுகின்றது.

Sunday, 21 August 2022

கொஞ்சம் யோசிங்க.......பாஸ்! - 2

காட்டு வழியே டூ-வீலரில் போகும் உங்களை ஒரு சிங்கம் துரத்துகிறது. எப்படித் தப்பிப்பீர்கள்? 'ரைட் இண்டிகேட்டரைப் போட்டு லெஃப்ட்டில் திரும்ப வேண்டும்' - என்பது பழைய காமெடி.

இதையே கொஞ்சம் சீரியஸ் ஆக்கி ஒரு நேர்முகத் தேர்வில் கேள்வியாகக் கேட்டார்கள்.

'நீங்கள் ஒரு காட்டில் சிங்கத்திடம் தனியாகச் சிக்கிக்கொண்டீர்கள். கையில் எந்த ஆயுதமும் இல்லை. எப்படித் தப்புவீர்கள்?'.

இதற்கு அவர் முதலில் 'அங்கு இருக்கும் மரத்தில் ஏறித் தப்புவேன்' என்றார்.

'அங்கு மரமே கிடையாது. என்ன செய்வீர்கள்?' என்றார்கள்.

'ஆற்றில் குதித்து நீந்தித் தப்புவேன்.'

'ஆறும் கிடையாது. அப்புறம்?', 'மலைக் குன்றில் ஏறிவிடுவேன்.' 'மலைக் குன்றும் கிடையாது' என்றதும் பதில் சொல்ல வேண்டியவர் சிரித்தார்... 'நான் வெற்றி பெற்றுவிட்டேன்' என்றபடி. எப்படி?

கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.


விடை: 'மரம் கிடையாது, ஆறு கிடையாது, மலைக் குன்று கிடையாது. அப்படி என்றால் அது எப்படிக் காடாக இருக்க முடியும்?' என்றார். அதுவே சரியான விடை. அந்த வேலையை அந்தப் பதிலே அவருக்குப் பெற்றுத் தந்தது!

Saturday, 20 August 2022

ஏழு வகை கோவில்கள் - 2

 ஆலக்கோவில்

ஆலக்கோவில் என்பது ஆனைக் கோயில் என்பதன் மரூஉ என்று அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும். 

இக்கோவிலின் வடிவமைப்பை பற்றி மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.

 சில அறிஞர்கள் ஹஸ்திபிரிஷ்டம் கோவில் வகையே ஆலக் கோவில் என்பர், அதாவது தூங்கும் நிலையில் இருக்கும் யானையின் பின் புறத்தைப் போன்ற தோற்றமுடைய விமானம் கொண்டது இவ்வகை கோவிலாகும். அதற்கு உதாரணமாக திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு ஆகிய கோவில்கள் கூறப்படுகின்றது. 

சிலர் ஆலம் என்பது நீர் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல், ஆதலால் நீர் சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில்களே ஆலக்கோயில்கள் என்று கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சை வலிவலம்,திருப்புகழூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களைக் கூறுவர். 

சில அறிஞர்கள் ஆல மரத்தைச் சார்ந்த கோவில்களே ஆலக்கோவில்கள் எனக் கூறுவர். இதற்கு உதாரணமாக திருக்கச்சூர் கோவிலையும் குறிப்பிடுவர்.

Friday, 19 August 2022

ஏழு வகை கோவில்கள் - 1




”பெருக்காறு சடைக்கணிந்த பெருமான் சேரும்
பெருங்கோயில் எழுபதினோ டெட்டும் மற்றும்
கரக்கோவில் கடிபொழில்சூழ் ஞாழற் கோயில்
  கருப்பறியல் பொருப்பனைய கொகுடிக் கோயில்
  இருக்கோதி மறையவர்கள் வழிபட்டேத்தும்  
இளங்கோயில் மணிக்கோயில் ஆலக்கோயில்
திருக்கோயில் சிவனுறையும் கோயில் சூழ்ந்து
  தாழ்ந்திறைஞ்சத் தீவினைகள் தீரு மன்றே”


என்ற அப்பர் பெருமானின் பாடல் வழியாக சங்க்காலத்து இறுதியில் வாழ்ந்த மன்னன் கோச்செங்கணான் சிவபெருமானுக்காக எழுப்பிய எழுபது கோவில்கள் பற்றியும், திருவாசக காலத்தில் இருந்த ஏழு வகை கோவில்கள் பற்றியும் அறிய முடிகிறது.

        ஆலக்கோயில்,
         இளங்கோயில்,
       கரக்கோயில்,
            ஞாழற்கோயில்,
                    கொகுடிக் கோயில்,
             மணிக்கோயில்,
            பெருங்கோயில்

என்பனவே அவ்வேழு வகை கோயில்களாகும். இவ்வேழு வகை கோவில்கள் இருந்த்து உண்மையெனிலும், அவை எவ்வாறு தோற்றமளிக்கும் என்பதில் பல வகையான கருத்துக்கள் கூறப்படுகின்றன. இவ்வகை கோயில்கள் சிற்ப சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ள விஜயம், ஸ்ரீபோகம், ஸ்ரீவிசாலம், ஸ்கந்தகாந்தம், ஸ்ரீகரம், ஹஸ்திபிரிஷ்டம், கேசரம் எனும் ஏழு வகைக் கோவில்களின் தமிழ்ப் பெயர்கள் என்றும் கூறப்படுகின்றது. எனினும் அவ்வேழு கோவில்களின் பொதுவான தோற்றங்களைக் காண்பதும் அவசியமாகும்.

கொஞ்சம் யோசிங்க.......பாஸ்!

ஸ்டைல் சலூன், பாய்ஸ் சலூன் என அந்த ஊரில் இரண்டே சலூன்கள்தான். ராமு முடிவெட்ட வேண்டும். இரண்டு சலூன்களையும் பார்த்தான். ஸ்டைல் சலூன் சுத்தமாக இருந்தது. அதன் ஓனர் தலைமுடி, மீசை எல்லாம் அழகாக ட்ரிம் செய்யப்பட்டு பளிச் என இருந்தார். பாய்ஸ் சலூன் கொஞ்சம் அழுக்காக இருந்தது. அதன் ஓனர் கடா முடி, தாடியுடன் இருந்தார். ஆனாலும், ராமு பாய்ஸ் சலூனுக்கே சென்றான். ஏன்?

கொஞ்சம் நல்லா யோசிங்க... விடை தெரியாதவங்க, அப்படியே ஸ்க்ரோல் பண்ணுங்க...

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

விடை: ஸ்டைல் சலூன் சுத்தமாக இருந்ததால் அங்கு கூட்டமே வராது என்று நினைத்து, பாய்ஸ் சலூனுக்கு ராமு சென்றான் என்று நீங்கள் நினைத்தால் அது தப்பு. அந்த ஊரில் இரண்டே சலூன்கள்தான் இருக்கிறனஎன்றால், அந்த சலூனின் உரிமையாளர்கள் பரஸ்பரம் இன்னொரு சலூன் உரிமையாளரிடம்தான் முடிவெட்டிக்கொள்ள வேண்டும். இருவரில் ஸ்டைல் சலூன் உரிமையாளர் அழகாக டிரிம் செய்த முடியுடன் பளிச்சென்று இருந்தால், அவர் பாய்ஸ் சலூன் ஓனரிடம்தானே முடி வெட்டியிருக்க வேண்டும். அந்த லாஜிக்!