ஆலக்கோவில்
ஆலக்கோவில் என்பது ஆனைக் கோயில் என்பதன் மரூஉ என்று அனைத்து அறிஞர்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகும்.
இக்கோவிலின் வடிவமைப்பை பற்றி மூன்று விதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
சில அறிஞர்கள் ஹஸ்திபிரிஷ்டம் கோவில் வகையே ஆலக் கோவில் என்பர், அதாவது தூங்கும் நிலையில் இருக்கும் யானையின் பின் புறத்தைப் போன்ற தோற்றமுடைய விமானம் கொண்டது இவ்வகை கோவிலாகும். அதற்கு உதாரணமாக திருவொற்றியூர், வடதிருமுல்லைவாயில், திருவேற்காடு ஆகிய கோவில்கள் கூறப்படுகின்றது.
சிலர் ஆலம் என்பது நீர் சூழ்ந்த இடத்தைக் குறிக்கும் சொல், ஆதலால் நீர் சூழ்ந்த இடத்தில் உள்ள கோயில்களே ஆலக்கோயில்கள் என்று கூறுகின்றனர். இதற்கு உதாரணமாக தஞ்சை வலிவலம்,திருப்புகழூர் ஆகிய ஊர்களில் உள்ள கோவில்களைக் கூறுவர்.
சில அறிஞர்கள் ஆல மரத்தைச் சார்ந்த கோவில்களே ஆலக்கோவில்கள் எனக் கூறுவர். இதற்கு உதாரணமாக திருக்கச்சூர் கோவிலையும் குறிப்பிடுவர்.
No comments:
Post a Comment