Sunday, 7 August 2022

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்.....

ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று முதலில் சொன்னவர் திரு மூலர். அவர் வாழ்ந்த காலத்தில் இப்படி ஒரு வாசகத்தை சொல்ல மிக பெரிய தைரியம் வேண்டும். 

சாதியும், மதமும், தீண்டாமையும் மலிந்து இருந்து காலத்தில் இப்படி ஒரு வரியை சிந்திப்பது கூட கடினமான காரியம். 

இப்படி சில புரட்சிகரமான கருத்துகளை சொன்னதால், திருமந்திரம் பல காலமாய் இருட்டடிப்பு செய்யப்பட்டு இருந்தது. 

சரி, முதல் வரி தெரியும், மற்ற வரிகள் ?

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்

நன்றே நினைமின் நமன் இல்லை நாணாமே

சென்றே புகும்கதி இல்லை நும் சித்தத்து

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே


ஒன்றே குலமும் = ஒன்றே குலம். உயந்த ஜாதி, தாழ்ந்த ஜாதி, உயர்ந்த மதம், தாழ்ந்த மதம் என்று ஒன்றும் கிடையாது....எல்லோரும் ஒரே குலம்.

ஒருவனே தேவனும் = கடவுள் ஒருவன் தான். இத்தனை கடவுள்கள் கிடையாது

நன்றே நினைமின் = நன்றே நினைமின். நல்லதே நினைக்க வேண்டும் - நமக்கு மட்டும் அல்ல மற்றவர்களுக்கும்.

நமன் இல்லை = அப்படி எல்லோருக்கும், எப்போதும் நல்லதே நினைத்து வாழ்தால், இறப்பே கிடையாது.

நாணாமே = வெட்கப் படாமல்

சென்றே புகும்கதி இல்லை = நல்லதை நினைப்பதை தவிர வேறே வேறு கதி இல்லை

நும் சித்தத்து = உங்களுடைய சித்தத்தில்

நின்றே நிலைபெற நீர் நினைந்து உய்மினே = எப்போதும் நல்லதையே நினைத்து நீங்கள் உய்யும் வழியை அடையுங்கள்

ஒன்றே குலம் என்பதன் மூலம் உடல் அளவில் எல்லோரும் ஒன்று என்றார்.

ஒருவனே தேவன் என்பதன் மூலம் மனதளவிலும் மனிதர்களுக்கு இடையில் எந்தப் பிரிவும் கூடாது என்றார்

பிரிவுகளை அகற்றி எப்போதும் எல்லோருக்கும் நல்லதையே சிந்தித்து வந்தால் மரணமில்லா பெறு வாழ்வு பெறலாம்

No comments:

Post a Comment