Tuesday, 30 August 2022

திருமூலர் திருமந்திரத்தில் சொல்லியுள்ள விளக்கங்கள்


                              

                                 ஞேயத்தை ஞானத்தை ஞாதுரு வத்தினை              

                                         மாயத்தை, மாமாயை தன்னில் வரும்பரை 
                                        ஆயத்தை, அச்சிவம் தன்னை யாகோசர 
                                        வீயத்தை முற்றும் விளக்கி யிட்டேனே. 

     அறியப்படும் பொருளையும், அறியும் அறிவையும், அறிபவனையும், மாயையின் விவரங்களையும், சுத்த மாயையில் விளங்கும் பரை, ஆதி, இச்சை, ஞானம், கிரியை என்கின்ற சத்தியின் கூட்டத்தையும், அச்சத்திகளில் விளங்கும் சிவத்தையும், சொரூப சிவத்தின் பிரபாவத்தையும் இவையாவற்றையும் இத்திருமந்திரத்தில் நான் விளக்கியுள்ளேன்.  
   
     விளக்கம் : ஞேயம் - அறியப்படும் பொருள். ஞானம் - அறிவு. ஞாதுரு - ஞாதுருவத்து - ஞாதுரு அத்து; அத்து - சாரியை; அறிபவன். மாயை - அசுத்த மாயை. மாமாயை - சுத்த மாயை. பரை ஆயம் - சத்திகளின் கூட்டம். அகோசரவீயம் - கண்ணுக்குப் புலப்படாமல் நின்ற விதை போன்ற பொருள். சொரூபசிவன் - பற்றப்படாதது. வீயம் - பீஜம் என்பதன் திரிபு; வித்து.    

No comments:

Post a Comment