இந்தியா கடந்த 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் வாங்கிய நிலையில் 75வது சுதந்திர தினத்தை இந்த ஆண்டு கொண்டாடி வருகிறது. நாடு முழுவதும் கடந்த சில நாட்களுக்கு முன்னரே சுதந்திர தின கொண்டாட்டம் ஆரம்பமாகி விட்டது என்பதும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரின் வீட்டிலும் சுதந்திரக் கொடியை ஏற்றிவைக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கேட்டுக் கொண்டதற்கிணங்க பலர் சுதந்திரக் கொடியை ஏற்றி வருகின்றனர்
உலகம் தனது கண்களை ஈரத்துடன் இந்திய திருநாட்டின் பக்கம் செலுத்தி கொண்டிருந்த போது நாம் 19ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இருந்தோம். இன்று இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்றும் உலகம் தனது கண்களை இந்தியாவின் மீதிருந்து எடுத்தபாடில்லை. காரணம், விடுதலை அடைந்த மிக குறுகிய காலத்திலேயே பெரு வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு இணையாக நம் இந்தியா வளர்ந்திருப்பது உலகம் அரசியலில் ஒரு ஆச்சரியம்.
இந்தியாவின் வளம் அளப்பரியது. வடக்கே வெள்ளி பனி மலைகள் முதல் தெற்கே திரண்டெழும்பும் ஆழி குமரி முனை வரை அதன் மேனி அழகை மேன் வளத்தை சொல்லிக் கொண்டிருக்கலாம். பெரு வளத்தை ஆங்கிலேயன் சுரண்டி தள்ளி சென்ற பின்னும் இந்தியா வீறு நடைக்கு எந்த தளர்வும் இல்லாதது சொல்லும் நம் வளத்திறத்தின் மாண்பை செரிவை.
இந்த 75ஆவது சுதந்திர தின அமுதப் பெருவிழா நமக்கு கிட்டிய செல்வமாக கொள்ளலாம். இந்த 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் தலைமுறையில் நாமிருப்பதை எண்ணி உவகை கொள்ளலாம். அடுத்த 100வது சுதந்திர தின விழாவையும் நாம் கட்டாயம் சிறப்பிப்போம்.
No comments:
Post a Comment