Wednesday 17 August 2022

அண்ணா


நாடாளுமன்றத்தில் தொடக்க உரையாற்ற அண்ணாவுக்கு மூன்று நிமிடங்கள் வாய்ப்பு கொடுத்தார்கள். கன்னிப்பேச்சு. ஆனால் அது, கனிந்த பேச்சு. மூன்று நிமிட வாய்ப்பு, மூன்று மணி நேரத் தங்கு தடையற்ற அருவியென, ஆற்றொழுக்காக அந்தப் பேருரை நிகழ்ந்தது.

தமிழ்மொழி ஆட்சிமொழியாக வேண்டும்’ என்று அவர் கூறியபோது, `மக்கள் பேசுவது குறைவாக இருக்கும் காரணத்தால், சிறுபான்மையாக இருக்கும் காரணத்தால் அதற்கு ஆட்சிமொழியாகும் தகுதி இல்லை’ என்று கூறிய கருத்துக்கு அண்ணா அருமையாகப் பதில் சொன்னார்:

``இந்த நாட்டில் காகங்கள் நிறைய இருக்கின்றன. மயில்கள் குறைவாக இருக்கின்றன. காகங்கள் நிறைய இருக்கும் காரணத்துக்காக காகத்தையா தேசியப்பறவையாக அறிவித்தோம்... அபூர்வமாக, அரிய வகையாக இருக்கும் மயிலைத்தானே தேசியப்பறவையாக நாம் அறிவித்தோம்.’’

அண்ணாவின் உரைகள் சமூக மேம்பாட்டுக்கானவை. அவர், சென்னையையும் செட்டிநாட்டையும் ஒருசேரப் பார்த்தார். “சென்னையில் வீடில்லா மனிதர்கள். செட்டிநாட்டிலோ ஆளில்லா அரண்மனைகள்” - இப்படி எதுகையும் மோனையும் இரண்டறக் கலந்து பேசும் அண்ணாவின் உரைகள் சமூக மேம்பாட்டுக்கானவை. 

- தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

No comments:

Post a Comment