Thursday, 11 August 2022

டாக்டர். உ.வே.சா.


டாக்டர்
.வே.சா.வின் வாழ்வின் திருப்புமுனை என்றால்அவர் சேலம் ராமசாமி முதலியார் என்பவரைச் சந்தித்தத்தைச் சொல்லலாம்.

முதலியார்யாரிடம் பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்களிடம் பாடம் கேட்டேன்.

முதலியார் (அலட்சியமாக): என்ன என்ன பாடம் கேட்டிருக்கிறீர்கள்?

உ.வே.சா.: குடந்தை அந்தாதி, மறைசையந்தாதி, புகலூரந்தாதி, …. (அந்தாதிகளில் இருபது, கலம்பகங்களில் இருபது, கோவைகளில் பதினைந்து, பிள்ளைத்தமிழில் முப்பது, உலாக்களில் இருபது, தூதுகள், என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.)

முதலியார் (இடைமறித்து): இதெல்லாம் படித்து என்ன பிரயோசனம்?

உ.வே.சா.: திருவிளையாடற் புராணம், கந்த புராணம், பெரிய புராணம், ….

முதலியார் இன்னும் அசரவில்லை.

உ.வே.சா.: நைடதம், பிரபுலிங்க லீலை, சிவஞான போதம்….. கம்பராமாயணம் இரண்டு மூன்று முறை படித்திருக்கிறேன்.

முதலியார்: சரி அவ்வளவுதானே?

உ.வே.சா. நொந்துபோய் நிற்கிறார்.

முதலியார்: இந்தப் பிற்காலத்துப் புஸ்தகங்களை எல்லாம் படித்தது சரிதான். பழைய நூல்களில் ஏதாவது படித்ததுண்டா?

உ.வே.சா.: நான் சொன்னவற்றில் எவ்வளவோ பழைய நூல்கள் உள்ளனவே?

முதலியார்அவைகளுக்கெல்லாம் மூலமான நூல்களை படித்திருக்கிறீர்களா?

.வே.சா.தாங்கள் எந்த நூல்களைச் சொல்கிறீர்கள் என்று தெரியவில்லையே!

முதலியார்சீவகசிந்தாமணி படித்திருக்கிறீர்களாமணிமேகலை படித்திருக்கிறீர்களாசிலப்பதிகாரம்?

இந்தக் கடைசி கேள்விதான் .வே.சாஅவர்களின் வாழ்வைப் புரட்டிப் போடுகிறது. ஏனெனில் அச்சமயத்தில் இந்நூல்களை இவரது ஆசிரியர்கூடப் படித்ததில்லைஇதன்பொருட்டு இவர் எடுத்த முயற்சிகளாலேயே நமக்குச் சங்க நூல்களைப் பற்றியும் தமிழின் இலக்கியத் தொன்மை பற்றியும் இன்றைய புரிதலில் ஒருவித மறுமலர்ச்சி ஏற்பட்டது என்பது தனி வரலாறு.

No comments:

Post a Comment