Friday, 12 August 2022

திருவோடு

இந்தியப் பெருங்கடலிலுள்ள ”சீசெல்ஸ்” தீவுகளில் வளரும் ஒருவகைப் பனைமரத்திலிருந்தே இது உற்பத்தியாகின்றது. கபாலம், அட்சய பாத்திரம்(மணிமேகலை) போன்ற பெயர்களாலும் அழைக்கப்படும் இந்தத் திருவோடு, முனிவர்கள் , துறவிகள் கைகளில் இருப்பது...தமது உணவைப் பிச்சையாக இதை ஏந்தியே பெறுவது, அன்றைய வழமையாக இருந்துள்ளது.

இந்தப் பனைமரத்திலுள்ள ஒரு பெரிய விதைதான் இந்த திருவோடாக செய்யப்படுகின்றது. இதற்கு கடல் தேங்காய் (Coco de mer)என்றும் பெயர் உண்டு.Praslin, Curieuse, Seychelles,தீவுகளில் மட்டுமே காணப்படும் ஒரு தனித்துவம் மிக்க மரமாகும். தாவர உலகில் மிக அதிக எடைகொண்ட
விதைகளை இவை கொண்டுள்ளன. இதனுடைய தோற்றம் பெண்களின் பின்புறத்தைப் போன்றே தோற்றமளிக்கும். இதனுடைய தாவரவியல் பெயர்
”Lodoicea callipyge”. அழகான பின்புறங்கள்”callipyge” என்ற கிரேக்க சொல் குறிக்கின்றது.

இத் தீவுகளைக் கண்டறிய முன்பு இவை கடலில் வீந்து அலைகளால் அடித்துச் செல்லப்பட்டு, பின்பு கரையொதுங்கிக் கிடந்தைதை கண்டுள்ளார்கள்...இந்த விதைகளை Maldive coconut என்றே ஆரம்பத்தில் பெயரிட்டு அழைத்துள்ளார்கள்...




இந்த திருவோட்டில் சேமிக்கும் உணவு, விரைவில் கெட்டுப்போவதில்லை என்பதை பட்டறிவால் உணர்ந்த சமணர், சிவனடியார், துறவிகள், திருவோட்டை பயன்படுத்தினர்




No comments:

Post a Comment