Monday, 15 August 2022

கடி ஜோக்ஸ்



 ""டானிக் சாப்பிடும் போது ஏன் ரூம் கதவை சாத்துற?''

""டாக்டர்தான் அரை மூடி டானிக் சாப்பிடச் சொன்னாரு!''

""தத்ரூபமா படம் வரைஞ்சும் மன்னரு பரிசு தரலையா ஏன்?''
""அதுவா... போர்க் களத்துல இருந்து மன்னர் ஓடற மாதிரியல்ல படம் வரைஞ்சிருந்தேன்.''


"மாத்திரையை எடுத்துக்கிட்டு சுடுகாட்டுப் பக்கம் ஏன்டா போறே?''
""ஆவி பிடிக்கிற மாத்திரைன்னு சொன்னாங்க, அதான்!'

"எதுக்காக உனக்கு இருநூறு ரூபா கொடுத்தாங்க?''
""நான் பாட்டுப் பாடுனதுக்கு.''
""அப்புறம் எதுக்கு இந்த ஐநூறு ரூபா கொடுத்தாங்க?''
""பாட்டை நிறுத்துனதுக்கு.''

"நீங்க எழுதுற ஜோக் ஒவ்வொண்ணும் சிந்திக்கிற மாதிரி இருக்கும்.''
""எப்படி?''
""இதுக்கு முன்னாடி இந்த ஜோக்கை எங்கேயோ படிச்ச மாதிரி இருக்குன்னு!''

"சின்ன வயசுலயே என் பையன் ரொம்ப ரோஷக்காரனா இருக்கான்.''
""எப்படி?''
""மார்க் குறைவா வாங்கியிருந்தான்னு இனிமே என் முகத்துல முழிக்காதேன்னு திட்டினேன். அதுலேர்ந்து காலையில அவனை எழுப்பினா, "நீ தூரமா போ, நான் எழுந்துக்கிறேன்'னு கறாரா சொல்றானே!''

மேனேஜர் வரும் போது நான் மரம் மாதிரி நின்னுக்கிட்டிருந்தது தப்பாப் போச்சு!''
""ஏன்... என்ன பண்ணாரு?''
""அறுத்து தள்ளிட்டாரு!''

"டாக்டர்! காதுல டிரெயின் ஓடுற மாதிரி சத்தம் கேட்குது டாக்டர்!''
""செக் பண்ணினேன் ஒண்ணும் கேட்கலையே.''
""அப்படின்னா ஏதாவது ஸ்டேஷன் வந்திருக்குமா டாக்டர்?!''

""ஏன்டா... உனக்கு அல்சராமே?''
""ஏன்டா அந்த வயிற்றெரிச்சலை கேட்கிற..!''

"அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?''
""நீங்க கொடுத்த "டியூப்' மாத்திரை பெருசா இருக்கு. முழுங்க பயமா இருக்கேன்னு சொன்னால், "காத்த' இறக்கிவிட்டு முழுங்குன்னு சொல்றாரு!''

No comments:

Post a Comment