1) கர்மத்தின் பலனை சாராது தனக்கு விதிக்கப்பட்ட கடமையை மட்டுமே செய்வன் துறவி, அவனே யோகி. வேள்வித் தீ வளர்க்காமல் இருப்பவனோ செயலை புறக்கணிப்பவனோ யோகி ஆகான் 

2) எதனை சந்நியாசம் என்கிறார்களோ அதுவே யோகம் ஆசைகளை துறக்காதவன் ஒருபோதும் யோகி ஆகமாட்டான்


3) தியான யோகத்தில் முன்னேற முனிவனுக்கு கர்மம் உபாயமாகிறது, தியான சித்தியடைந்தவனுக்கோ செயலற்றிருப்பது உபாயமாகிறது,


4) ஒருவன் எப்பொழுது மனதில் தோன்றும் ஆசைகள் அனைத்தையும் புறக்கணித்து விட்டு இந்திரியப் பொருட்களிலும் கர்மத்திலும் பற்றுதலின்றி இருக்கின்றானோ அப்போது பூரண யோக நிலையை அடைந்து விட்டான் என்று சொல்லப்படுகிறது

,
5) உன்னை நீயே உயர்த்திக் கொள். நீ உன்னை ஒருபோதும் தாழ்த்திக் கொள்ளாதே, உன் மனமே உனது நண்பன் . உன் மனமே உனது பகைவன்.


6) எவனொருவன் தன் மனதை ஜெயித்து விட்டானோ அவனுக்கு அனுடைய மனமே நண்பனாகச் செயல்படுகின்றது. மனதை வெல்லாதவனுக்கு மனம் எப்போதும் பகைவன் போல் செயல்பட்டு கேடு விளைவிக்கின்றது,


7) தன்னை வென்று பேரமைதியில் நிலைபெற்று குளிர் வெப்பம் சுகம் துக்கம் மானம், அவமானம் இவற்றில் சமநிலை பெற்றவனிடம் பரமாத்மா ஒளிர்கின்றது.


8) சாஸ்திர அறிவிலும், அனுபவ அறிவிலும் திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜயித்து திருப்தி கொண்டவனாய் அசைவுகளுக்கு அப்பாற்பட்டு புலன்களை ஜெயித்து கல்லையும் மண்ணையும் பொன்னையும் ஒன்றுபோல் காணும் யோகியே, யோக நிலையுற்றான் எனப்படுவான்.


9) தனிமையான இடத்தில் அமர்ந்து மனதையும் உடலையும் , வசப்படுத்தியவனாய் ஆசையும் தேவைகளும் அற்று யோகியானவன் எப்போதும் மனதை பரம்பொருளில் லயிக்கச் செய்தல் வேண்டும்.


10) சுத்தமான இடத்திலும், சமமான இடத்திலும் துணி, மான்தோல், தர்ப்பை இவற்றின் மீது தனக் கோர் உறுதியான ஆஸனம் அமைத்துக் கொண்டு மனதை ஒருநிலையில் குவிய வைத்தல் வேண்டும்.