திருப்தி இரண்டு வகையானது
ஒன்று
உள்ளத்தின் ஆழத்தில் இருந்து வரும் உண்மையான திருப்தி;
மற்றொன்று
உதட்டளவில் இருந்து வரும் போலியான திருப்தி.
உணவு, உறக்கம், சுகம், புகழ், செல்வம்,
அந்தஸ்து, கௌரவம், சகல சுகபோகங்கள், பிள்ளைச் செல்வங்கள், அசையாத
சொத்துக்கள் எனக்கு போதுமான அளவு கிடைத்து விட்டது; நான் திருப்தியாக
இருக்கிறேன் என்று சொன்னால் அது போலியான திருப்தி.
கடுமையான முயற்சிகளின் மூலம் செயற்கரிய
செயலைச் சாதித்து காட்டிய பின்பு ஏற்படுகிற சந்தோஷமும், திருப்தியும் தான்
உண்மையான திருப்தி ஆகும். இதில் தான் முழுமையான மகிழ்ச்சியும், ஆனந்தமும்
அடங்கியுள்ளன.
கடுமையான உழைப்பின் மூலம் ஒரு சாதனையைச்
சாதித்துக் காட்டுவது தான் பெருமைக்கும் சிறப்புக்கும் உயர்வுக்கும்
புகழுக்கும் காரணமாகிறது.
No comments:
Post a Comment