ஒரு காலை நேரம் , புத்தர் ஒரு மரத்தடியிலே உட்கார்ந்திருக்கார் . அவருக்கு எதிரே
ஏராளமான சீடர்கள் உபதேசத்தை கேட்பதற்கு ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள்
வழக்கமாக எப்போதும் புத்தர் வந்தவுடனே பேச ஆரம்பிசிடுவார் , ஆனா இந்த தடவை எல்லாம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது
வரும்போதே கையிலே ஒரு மலரை எடுத்து கொண்டு வந்தார் வந்து உட்கார்ந்தார் அவ்வளவுதான் , அதுக்கப்பறம் அவர் எதுவும் பேசவில்லை
கையிலே இருந்த அந்த பூவை பார்த்துகிட்டே அவர் பாட்டுக்கு உட்கார்ந்திருக்கார் , உச்சிவேளை வந்திட்டது ... அப்பவும் பேசலை ! அமைதியா இருக்கார்
அந்த நேரத்துல - திடீர்ன்னு ஒரு சிரிப்பு சத்தம் . யார் என்று பார்கிறார்
ஒரு சீடன் , அவன் பேரு மகாகாஷ்யப் .விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பிச்சுட்டான் . அங்கெ இருந்த எல்லோரும் இவன் சிரிக்கறதை வேடிக்கை பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க .
இவனுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சு ? புத்தி கலங்கிப் போச்சா ? இந்த சீடனும் அதுவரைக்கும் இதுபோல நடந்து கொண்டது கிடையாதாம் . எப்போதும் அமைதியா இருகிறவன் இன்றைக்கு இப்படி சிரிக்கிறான் , அவனை எல்லோரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக இப்படி சிரிக்கிறானா ?
புத்தர் அவனை தலை நிமிர்ந்து பார்கிறார்
" இங்கே வா " ன்னு கூப்பிடுகிறார் .
அவன் கையிலே அந்த மலரைக் கொடுக்கிறார் , பிறகு சொல்கிறார்
" இதோ பாரப்பா ! வார்த்தைகள் மூலமாக நான் எதையெல்லாம் தரமுடியுமோ ... அதையெல்லாம் மற்ற சீடர்களுக்கு கொடுத்து விட்டேன் . வார்த்தைகளால் புலபடுத்த முடியாததை எல்லாம் உனக்கு தருகிறேன் "
இப்படி சொல்லி கையிலே இருந்த மலரை அந்த சீடர் கையிலே கொடுத்தார் .
இதற்க்கு என்ன அர்த்தம் ?
இந்த நிகழ்ச்சி நடந்து 2500 ஆண்டுகளுக்கு மேலே ஆயிட்டது .. இன்னமும் பல ஞானிகளெல்லாம் அதை பற்றி யோசித்து கொண்டிருகிறார்களாம் !
புத்தர்கிட்ட இருந்து அந்த சீடர் கிட்ட போனது மலர் அல்ல . அந்த மலர் ஒரு வெறும் அடையாளம் மட்டும் தான் . இடம் மாறியது மலர் அல்ல .
புத்தர் கிட்டே இருந்த இருப்புணர்வு இடம் மாறியிருக்கு அவ்வளவுதான் , ஆனால் புத்தர் அந்த சீடர் கிட்டேயே போய்விடவில்லை . அவர் அப்படியேதான் இருக்கிறார்
ஒரு விளக்கில் இருந்து இன்னொரு விளக்கை கொளுத்துவதாலே இந்த விளக்கில் உள்ள வெளிச்சம் குறைந்து விடுமா என்ன ? அது மாதிரிதான்
இது வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைமாற்றம் என்கிறார் ஓஷோ .
மனதிலே இருந்து மனதிற்கு இடம் பெயரும் நிலை மாற்றத்தை வார்த்தைகளால் கொடுக்க முடியாது .
அதை அந்த சீடருக்கு கொடுத்தார் புத்தர் . அந்த சீடர் இரண்டாவது புத்தராக மாறினார் என்பது வரலாறு .

No comments:
Post a Comment