Sunday, 27 July 2014

பக்தி....2


"பக்தி என்பது கடவுளிடம் வைக்கும் அன்பு. சம வயதினரிடம் காட்டும் அன்பு சிநேகிதம், நட்பு என்றும் கூறலாம். பெரியவர்களிடம் வைக்கும் அன்பு மரியாதை; குழந்தைகளிடம் காட்டும் அன்பு வாத்சல்யம்; கதாநாயகன் -கதாநாயகியின் அன்பு சிருங்காரம்; சாதாரண மனிதர்கள் அவர்களைவிட கஷ்டப்படுபவர்களிடம் காட்டும் அன்பு பரிவு; நம்மைவிட பெரியவர்கள் நம்மிடம் காட்டும் அன்பு அருள், கிருபை என்றும் சொல்லலாம். கடவுளின் அருள் நமக்கு இருக்குமானால், அந்த அன்பிற்கு இறைவனின் கருணை என்றும் கடவுளின் அனுகிரகம் என்றும் சொல்லப்படும். இறைவனிடம் நாம் முழு மனதுடன் பிரார்த்தனை செய்வது பக்தி எனப்படும்.''

-  காஞ்சி மாமுனிவர் ஜகத்குரு காமகோடி ஸ்ரீ சந்திர சேகர சுவாமிகள்

No comments:

Post a Comment