Friday, 25 July 2014

குரு - சீடன்....5

நரேந்திரர் பிரம்மசமாஜத்து உறுப்பினர். உணவிலோ, மற்ற பழக்க வழக்கங்களிலோ பெரிதாக ஆசாரங்கனைப் பின்பற்றாதவர். பலதரப்பட்ட நண்பர்கள் உடையவர். அவரது கண்ணோட்டத்தில் சிலவேளைகளில் ஸ்ரீராமகிருஷ்ணரின் செயல்களே தவறென்று பட்டது. அவற்றைக் கண்டிக்கவும் அவர் தயங்கவில்லை. பின்னாளில் நரேந்திரர், 'என்னைப்பற்றி என்ன சொல்வேன்? நான் அவரது பூதகணங்களுள் ஒருவன் என்றெண்ணுகிறேன். அவரிடமே அவரைப்பற்றி தவறாக எதையாவது உளறுவேன், அதைக் கேட்டு அவர் சிரிப்பார் என்று கூறியதுண்டு.

ஒருநாள் ஸ்ரீராமகிருஷ்ணர் ஒரு கருத்தைப்பற்றி கூறிக் கொண்டிருந்தார். நரேந்திரர் அதனை எதிர்த்துக் கூறினார். ஸ்ரீராமகிருஷ்யர் எவ்வளவோ முயன்றும் அவரது கருத்தை நரேந்திரர் ஏற்றுக்கொள்ளுமாறு செய்ய இயலவில்லை. நரேந்திரருக்கோ தமது கருத்தை ஸ்ரீராமகிருஷ்ணர் எதைச் சொன்னாலும் பொருட்படுத்தாமல் மௌனமாக இருந்தார். கடைசியில் ஸ்ரீராமகிருஷ்ணர் சற்று ஆத்திரத்துடன், 'இதோ பார், நான் சொல்வதைக் கேட்க முடியாது என்றால் நீ ஏன் இங்கே வருகிறாய்?' என்று கேட்டார். அதற்கு நரேந்திரர் அமைதியாக, 'நீங்கள் சொல்வதைக் கேட்பதற்காக நான் இங்கு வரவில்லை. நான் உங்களை நேசிக்கிறேன், அதற்காக இங்கு வருகிறேன்' என்றார். ஸ்ரீராம கிருஷ்ணர் உணர்ச்சிப்பெருக்குடன் எழுந்து நரேந்திரரை அப்படியே கட்டிக் கொண்டார்.

No comments:

Post a Comment