ஓர் இளம் பெண் சாதுவை வணங்கி “ மகானே என் குழந்தைக்கு ஏதோ நோய்
தாக்கியுள்ளது தாங்கள்தான் எப்படியாவது என் குழந்தையின் நோயைக் குணப்படுத்த
வேண்டும் நான் தங்களையே நம்பி வந்துள்ளேன் “ என்று
வேண்டினாள்.
“ சரி பயப்படாதே நான் உன் குழந்தை குணமாக இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன்” என்று சொல்லி கடவுளைப் பிரார்த்திக்கத் தொடங்கினார்.
அந்த கிராமத்தில் கடவுள் நம்பிக்கை இல்லாத ஒருவன் இருந்தான். அவனும் அப்போது அங்கே இருந்தான் அவன் சாதுவிடம் “ இந்தக் குழந்தைக்கு ஏற்கனவே மருந்து கொடுத்தாயிற்று அதன் பிறகும் நோய் குணமாகவில்லை மருந்தில் குணமாகாத நோய் உங்கள் பிரார்த்தனையில் குணமாகிவிடுமா? “ என்று கேலியாகக் கேட்டான்.
உடனே சாது அவனைப் பார்த்து “ சரியான மூடனாக இருக்கிறாயே “ என்றார்
அவ்வளவுதான் இறை நம்பிக்கை இல்லாதவன் முகம் கோவத்தால் சிவந்து போனது அவன் சாதுவை கை நீட்டி அடிக்க ஆவேசத்துடன் வந்தான்.
இப்போது சாது அவனிடம் நிதானமாகக் கேட்டார். “ மகனே சற்றுப் பொறு நான் உன்னை மூடன் என்று கூறிய ஒரு சொல்லே உன்னைக் கோபமூட்டி என்னைத் தாக்க வருகின்ற அளவுக்கு வலிமையானதாக இருக்கிறது அப்படியானால் முழுமையான நம்பிக்கையுடன் இறைவனிடம் உண்மையாகப் பிரார்த்திக்கும் சொற்கள் பலிக்காமல் போய்விடுமா?” என்று கேட்டார்.
அடுத்த கணம் அவன் கோபம் மறைந்து போனது. மன்னிப்புக் கேட்டு சாதுவை வணங்கிச் சென்றான்.

No comments:
Post a Comment