ஆசையைப் பற்றிய பழமொழிகள்
விட்டதடா ஆசை விளாம் பழத்து ஓட்டோட
ஆசையில்லாத கோயிலில் பூசை எதுக்கு?
இருக்கறதை விட்டுவிட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படலாமா?
ஆசை இருக்கு தாசில் பண்ண... அதிர்ஷ்டம் இருக்கு மாடு மேய்க்க.
பேராசை பெரு நஷ்டம்.
ஏகாதசி தோசை, இளையவள் மேலே ஆசை
ஆசை அறுபது நாள்; மோகம் முப்பது நாள்.
கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை.
ஆசையில்லா மனமும் ஓசையில்லாக் கடலும் உலகில் இல்லை
ஆசை வெட்கமறியாது.
கூரை ஏறிக் கோழிப் பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போக ஆசைப்பட்டானாம்
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு
ஆசை வெட்கம் அறியாது
ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு
ஆசை வெட்கம் அறியாது
No comments:
Post a Comment