Sunday 19 June 2022

அம்மாவின் டைரியிலிருந்து .....7


 

நவகிரக  கோலங்கள்

அம்மா தினமும் மாலை விளக்கு பூஜை செய்வார்கள். எனக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து அம்மாவுடன் நானும் கூட அமர்ந்து பூஜை முடிந்தவுடன் கிடைக்கப்போகும் உலர்திராட்சைக்காகவும், கல்கண்டுக்காகவும் காத்திருப்பேன்.

ஒரு பலகையில் அன்றைய கிழமைக்கேற்ற கோலத்தைப்போட்டு அதில் பெரிய  குத்து விளக்கு, அதன் பக்கத்தில் இரண்டு புறமும் சிறு குத்து விளக்குகள் வைத்து முதலில் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்துள்ள சுலோகம் ஒன்பது முறை சொல்வார்கள். பிறகு கந்த ஷஷ்டி கவசம் முழுதும் சொல்லி முடித்துவிட்டு படைப்பார்கள்.

அப்பா மறைவுவரை இதனை தொடர்ந்து கிட்டத்தட்ட 40  ஆண்டுகள் செய்துவந்தார்கள். அதற்கு பிறகு ராம ஜபம் மாத்திரம்தான்.

டைரியில் கோலங்கள் மாத்திரம் கிடைத்தன. ஸ்லோகங்கள் எழுதப்படவில்லை.

இந்த கோலங்கள் கூகிளில் அப்படியே இருந்ததால் அவற்றை இங்கு பதிவிட்டுள்ளேன்.



ராகு செவ்வாய் உடனும் , கேது சனி உடனும் கருதப்படுவதால் அவைகளுக்கு தனி கிழமைகள் கிடையாது. 

ஆனால்  கோலங்கள் உள்ளன. அவற்றை கூகிளில் இருந்து எடுத்துள்ளேன்.

ராகு


கேது 





No comments:

Post a Comment