Wednesday 22 June 2022

எழுத்தியல்

 


எழுத்தின் பெயர் காரணம்

எழுத்திற்கு ஒலி வடிவம், வரி வடிவம் என இரு வடிவங்கள் உள்ளன.  ஒலி வடிவம் மாறாதது. வரி வடிவம் கால ஓட்டத்தில் மாறக்கூடியது.

இரண்டு வடிவத்திற்கும் 'எழு' என்பது தான் வேர்ச்சொல். எனவே, எழுப்பப்படுவதால் எழுத்து என்பது ஒலிவடிவத்திற்கான காரணமாகும். எழுதப்படுவதால் எழுத்து என்பது வரிவடித்திற்கான காரணமாகும். 

எழுத்திலக்கணத்தின் வகைகள்

1.எண்
2.பெயர்
3.முறை
4.பிறப்பு
5.உருவம்
6.மாத்திரை
7.மொழிமுதல் எழுத்துக்கள்
8.மொழி இறுதி எழுத்துக்கள்
9.இடைநிலை எழுத்துக்கள் (அ) மெய்ம்மயக்கம்
10.போலி
11.பதம்
12.புணர்ச்சி

எனப் பன்னரண்டு வகையாக்கிப் பவணந்தி முனிவர் எழுத்தின் இலக்கணத்தைக் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment