Monday 13 June 2022

`உதறுவாதம்' பற்றி தெரிந்து கொள்வோம்! | Parkinson's Disease


 இது மூளை சம்பந்தப்பட்ட நோயா?

ஆம். இதை நரம்பு மண்டலக் கோளாறு (Neuro degenerative disorder) என்று கூறலாம். இத்தொல்லை சிறிய அளவில் ஆரம்பித்து பல வருடங்களில் படிப்படியாக அதிகரித்து உடலின் செயல் திறனைக் குறைத்து மரணத்தில் முடிவடையும்.

நோய் வரக் காரணம் ?

மூளையில் உள்ள டோபாமையன் எனும் திரவம் குறைவதால் இந்நோய் ஏற்படுகிறது. ஆனால் எதனால் இத்திரவம் குறைகிறது என்பது பற்றி சரியாகத் தெரியவில்லை . இந்நோய் சுமார் 80% அளவிற்கு திரவம் குறைந்த பின்னர் தான் இந்நோயின் அறிகுறி தோன்றும்.

யாருக்கெல்லாம் இந்நோய் வர வாய்ப்பு அதிகம் உண்டு ?

  • முதுமை

  • தலைக்காயம்

  • சுமார் 15- 20% நோயாளிகளுக்கு பரம்பரையாக வரலாம்

இந்நோயின் முக்கிய அறிகுறிகள் என்ன ?

  • மெதுவாக செயல்படுவது

  • சதை இறுக்கம்

  • நடுக்கம்

  • நிலை தடுமாறுதல்

  • இந்நோயின் அறிகுறிகள் முதுமையில் மெதுவாக தோன்றுவதால்  

    •  சில சமயங்களில் முதுமையின் விளைவுக்கும் இந்நோய்க்கும் அதிக வித்தியாசம் காண முடிவதில்லை.

    உடல் மெதுவாக செயல்படுவதினால் என்ன தொல்லைகள் ஏற்படலாம்?

    • ஒரு காரியத்தை செய்வதற்கு தாமதம் ஏற்படும். உதாரணம்: ஒரு பேனாவை எடுத்து எழுதுவதற்கு ஒருவர் கையை மெதுவாக எடுத்து விரல்களை மடக்கி ஒரு பேனாவை பிடிப்பதற்கு நீண்ட நேரம் ஆகும்.

    • நடப்பதற்கு சிரமப்படுதல். காலை சிறு சிறு அடியாக எடுத்து வைத்து மெல்ல மெல்ல தள்ளாடி நடப்பது. ● உடை உடுப்பது, உணவு உண்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் • குரல் வளம் குறையும்

    • கையெழுத்து சிறியதாக மாறும்

    • முகத்தில் எவ்வித உணர்ச்சியும் இருக்காது

    • நன்றி : விகடன் 

No comments:

Post a Comment