Saturday 18 June 2022

மஞ்சள்

 


மஞ்சள் என்றாலே நமக்கு ஞாபகம்  வருவது மஞ்சள் நிறம் ,மங்கள பொருள்  என்பதுதான் .

மஞ்சள், நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .


ஆன்மீகத்தை வைத்து பார்க்கும் போது ,மஞ்சளில் லக்ஷ்மி தேவி வாசம் செய்கிறாள் .அதனால்தான் மஞ்சளை தாம்பூலத்துடன் வைத்து கொடுக்கிறார்கள்.


அறுவடை நாளான பொங்கல் பண்டிகையின் போது ,பொங்கல் பானையில் மங்கள அடையாளமாக மஞ்சளை வைத்து கட்டுகிறார்கள்.நல்ல நாட்களில் மஞ்சள் சிறப்பிடம் வகுக்கிறது .நிம்மதியை கொடுக்கும் திறன் மஞ்சள் வாசனைக்கு உரிய குணமாகும்.

மஞ்சள் கலந்த நீரை வீட்டு வாசலில் தெளித்தால் பூச்சிகள்,எறும்புகள் ,கரையான்கள் வராமல் தடுக்கலாம் 

மஞ்சள்  உடலுக்கு நிறத்தை கூட்டும் . மஞ்சள்  பூசி குளிக்கும் வழக்கம் கிராமங்களில் இருந்து வந்தது.இப்ப கிராமங்களில் கூட ஒரு சில பெண்கள் மட்டுமே மஞ்சள் பூசி குளிக்கிறார்கள் .கஸ்தூரி மஞ்சள்  வாசனையுடன் இருக்கும்.இன்றைய  பெண்கள் இதை பூசுகிறார்கள் 

மஞ்சளை  புனிதமானதாக இந்துக்கள் கருதுகிறார்கள் .அம்பாளுக்கு மஞ்சள் மிகவும் பிடிக்கும் .அதனாலேயே வீட்டிற்கு வரும் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கு கொடுத்து அம்பாளே வந்ததாக கருதி ,உபசரிக்கிறோம் .

No comments:

Post a Comment