Sunday 5 June 2022

கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும்

ஒருமுறை புலமையில் மிகவும் தேர்ந்த அம்பல சோமாசி என்ற புலவர் கம்பரைக் காண வந்தார். அவருக்கு தான் அனைத்தும் கற்றோம் என்ற செருக்கு மிகுந்துள்ளது. கம்பரின்  வீட்டிற்கு வந்த பொழுது அவர் வீட்டிற்கு முன்னால் சாணி தட்டும் ஒரு பெண்மணியிடம் கம்பர் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்தப் பெண்மணி கம்பரை காண்பதற்கு நிறைய பேர் வந்திருக்கிறார்கள் கூட்டம் மிகுந்து உள்ளது ஆதலால் சற்று காத்திருங்கள் காணலாம் என்று கூறியுள்ளார்.

அவருக்கு உடனே கோபம் வந்தது. ஒரு சாணி தட்டும் ஒரு பெண்மணி கேட்டால் உண்டு இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் அளிக்க வேண்டும் இது என்ன இவ்வளவு பேசுகிறாயே நீ என்ன கம்பரிடம் தமிழ் படித்திருக்கிறாயா என்ன என்று கேட்டார்.மேலும் மிகவும் வாயாடியாக இருக்கிறாயே என்றும் கூறினார்

உடனே அதற்கு அந்தப் பெண்மணி ஐயா எனக்கு அதற்கெல்லாம் ஏது நேரம் எனக்கு அன்றாட பணிகள் பொழுது சரியாக இருக்கிறது .இருந்தும் தாங்கள் கேட்டதால் நான் தங்களிடம் ஒரு விளக்கத்தை அறிய விரும்புகிறேன். எனக்கு தெரிந்த தமிழை நான் விடுகதை வடிவத்தில் நான் உங்களிடம் கூறுகிறேன் அதற்கு முடிந்தால் தாங்கள் விடை அளியுங்கள் என்று சொன்னார்.

புலவருக்கு ஆச்சரியம் ஒரு சாணி தட்டும் பெண்மணி என்னிடம் கேள்வி கேட்கிறாரளா  சரி கேளு என்று கூறினார்.

உடனே அவர் வட்டமாக இருக்கும் வன்னி கொடியில் தாவும் கொட்டுபவர் கையில் கூத்தாடும் எரித்தால் சிவசிவ என்பர் அது என்ன என்று கேட்டாள்.

புலவருக்கு சப்தநாடியும் ஒடுங்கிவிட்டது அவர் மிகவும் முழிப்பதை கண்ட அந்த பெண்மணி ஐயா தாங்கள் ஒரு நாள் டைம் எடுத்துக்கொண்டு எனக்கு முடிந்தால் நாளை பதில் சொல்லுங்கள் என்று மிகுந்த செருக்குடன் போய்விட்டாள்.

அப்பொழுது கம்பர் வெளியே வந்து அவரை வாருங்கள் என்று அழைத்துச் சென்றார். அவரிடம் அந்தப் பெண்மணி கேட்ட கேள்வியை சொன்னார்.

அதற்கு கம்பர் அது ஒன்றும் இல்லையா அவளுடைய தொழிலை சொல்லி இருக்கிறாள் என்றார். ஐயா எனக்கு புரியவில்லை என்று இந்த புலவர் சொல்ல உடனே வரட்டியைத்தான் அப்படி சொன்னாள். வட்டமாக இருக்கும்  என்று.மேலும் அதை வன்னி எனும் நெருப்பில் சுடுவார்கள்.(வன்னி மரத்தின் நெருப்பில் தான் வரட்டியை சுடுவார்கள்) சுட்டதும் எடுத்த சாம்பலே திருநீறு ஆகும் .அதை நெற்றியில் பூசும் போது சிவ சிவா என்று சொல்லி பூசிக் கொள்வார்கள் அல்லவா. அதைத்தான் அவள் அப்படி சொல்லி இருக்கிறாள் என்றார்.

அதைக்கேட்டு புலவர் அசந்துவிட்டார் ஆக கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவி பாடும் என்று சும்மாவா சொன்னார்கள் .கம்பன் வீட்டில் வறட்டி தட்டும் ஒரு பெண்ணின் தமிழையே நம்மால் புரிந்துகொள்ள முடியவில்லையே என்று மிகவும் வருந்தி வாயை மூடிக் கொண்டு சென்றுவிட்டார்.

இதனாலேயே கம்பன் வீட்டு கட்டுத்தறியும் கவிபாடும் என்ற பழமொழி வரலாயிற்று

No comments:

Post a Comment