Wednesday 29 June 2022

வெற்றிலை

வெற்றிலையை நாம் அடிக்கடி பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வெற்றிலையை மென்று தின்பதால் விறைப்புக் கோளாறு முதல் இன்னும் சில நோய்களும் சேர்ந்து தீருமாம். இதை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பலப்படும் என்பது வெகு சிலரே அறிந்திருப்பார்கள். எனவே இந்த தொகுப்பில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் என்னவென்று விளக்கமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்

* வெற்றிலையின் உள்ளே ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சனையை சமாளிக்கலாம். மேலும் இதை உட்கொள்வதால் தொண்டையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

* வெற்றிலை அடிபட்ட உடல் காயத்திற்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. காயம் விரைவாகக் குணமடைய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் வழக்கத்தைவிட அதிகமாகக் காயம் குறைய உதவுகிறது.

* வெற்றிலை வயிறு மற்றும் அஜீரண கோளாற்றைச் சரி செய்யப் பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது.

No comments:

Post a Comment