Thursday 14 June 2012

மூளைக்கு வேலை - 3


Find the baby faces & lady bugs - how many? 



அதிகமாக சாப்பிடுவதும், மாசடைந்த சுற்றுச் சூழலில் வசிப்பதும் மூளையை பாதிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். மேலும் தலைமைச் செயலகத்தை செயலிழக்கச் செய்பவைகள் பற்றி மூளை நரம்பியல் நிபுணர்கள் கூறியுள்ளவை -

அதிகமா சாப்பிடாதீங்க
மிக அதிகமாக உணவு உண்பதால் மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும். மேலும் அதிக அளவில் சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

கட்டாயம் காலை உணவு
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை பாதிப்பிற்கு காரணமாகும். மேலும் புகை பிடிப்பதால் மூளை சுருங்குகிறது இது அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

சுற்றுச் சூழல் சீர்கேடு
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும். நீண்ட நாட்களுக்கு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர் மருத்துவர்கள் ஏனெனில் நன்றாக தூங்குவது நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். அதேபோல் தலையை மூடிக்கொண்டு தூங்குவதும் ஆபத்தானதாம். இதனால் போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரித்து சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. இதனால் மூளை பாதிப்படைகிறது.

ஓய்வு அவசியம்
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.
மூளைக்கு வேலை தராமல் இருப்பதும் ஆபத்தானதுதான் என்கின்றனர் மருத்துவர்கள். மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது
.
நிறைய பேசுங்க
அதிகம் பேசாமல் இருப்பதும் மூளையை பாதிக்குமாம். எனவே அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது என்கின்றனர் மருத்துவர்கள்.


WHAT  DO YOU SEE?





No comments:

Post a Comment