Friday 15 June 2012

யோகமும், மனித மாண்பும்


திருச்சி  மண்டலத்தில், உலக சமுதாய சேவா சங்கமும், பல்கலைக்கழகங்களும் இணைந்து நடத்தும்  "யோகமும், மனித மாண்பும்' பட்டயம ( Diploma )  மற்றும்   பட்டக்கல்விக்கான (Bsc., MSc )  மாணவர் சேர்க்கை நடக்கிறது.

உலக சமுதாய சேவா சங்க திருச்சி மண்டலத் தலைவர்  திருமதி மாலா ஜெயப்பிரகாஷ் கூறியதாவது

திருச்சிபுதுக்கோட்டைபெரம்பலூர்அரியலூர்  மாவட்டங்களில் 15  மனவளக்கலை மன்ற அறக்கட்டளைகள் 100க்கும் மேற்பட்ட தவமையங்களைக் கொண்டு உலக சமுதாய சேவா சங்கம் திருச்சி மண்டலமாக செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு துறைகளில் உள்ள ஆண்கள், பெண்கள் இருபாலருக்கும் உடற்பயிற்சி, தியானப்பயிற்சி, காயகல்ப பயிற்சி, அகத்தாய்வு பயிற்சி கற்பிக்கப்படுகிறது. ஆழியாரில், விஷன் பார் விஸ்டம் என்ற கல்வி நிலையத்தை உருவாக்கி கடந்த ஆறு     ஆண்டுகளாக தமிழகத்திலுள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களுடன் இணைப்பு பெற்று "யோகமும் மனித மாண்பும்' என்ற கல்வியை மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் கீழ் இயங்கும் அறிவுத்திருக்கோவில்களை பல்கலைக்கழகங்களின் கல்வி மையமாக கொண்டு பட்டயம் மற்றும் பட்டக்கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. நடப்பு கல்வியாண்டில் பாரதியார் பல்கலை., அவினாசிலிங்கம் பல்கலை., பாரதிதாசன் பல்கலை., மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை., சென்னை பல்கலை., பெரியார் பல்கலை., தமிழ்நாடு உடற்கல்வி பல்கலை., தஞ்சை தமிழ் பல்கலைகழகங்களின் இணைப்பு பெற்று பட்டயம் மற்றும் இளங்கலை முதுகலைப் பட்டக்கல்வியில் மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது.

எட்டாம் வகுப்பு தேறியவர்கள் மற்றும் தவறியவர்கள் ஆழியார் விஷன் கல்வி நிலையத்தில், "யோகமும் மனிதமாண்பும்' கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திருச்சிபுதுக்கோட்டைபெரம்பலூர்அரியலூர்  மாவட்டங்களில் உள்ள மனவளக்கலை மன்றங்களில் தொடர்பு கொண்டு 15 வயதிற்கு மேற்பட்டவர்கள் பயன்பெறலாம். இக்கல்விக்கு வயது ஒரு தடையல்ல. பகுதி நேர கல்வியாக மாணவர்கள் பயன்பெறும் வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. வாரத்தில் குறிப்பிட்ட சில மணி நேரங்கள் விரும்பிய நேரத்தில் வகுப்பில் பங்கேற்று பாடங்களை கற்று தேர்ச்சி பெறலாம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.



தொடர்புக்கு

அலுவலர்
உலக சமுதாய சேவா சங்கம் - திருச்சி மண்டலம்
அறிவுத் திருக்கோவில், காட்டூர் PO
திருச்சி 620019

trichy.zone@vethathiri.edu.in


1 comment:

  1. haha..LOVE the kid in meditation pose with serious concentrated facial expression...Superb ;)

    ReplyDelete