வாஸ்துதான் காரணம்!
ரூபாய் மதிப்பு சரிவுக்கு நிதி நிபுணர்கள் பல காரணங்களை அலசிக் கொண்டிருக்க, அதன் புதிய சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ஒரு நிபுணர். அமெரிக்க டாலர் உட்பட அன்னிய கரன்சிகளுக்கு இணையான ரூபாய் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருகிறது. 2010ல் ரூ.47 ஆக இருந்த ஒரு டாலர் இப்போது ரூ.56 ஆக இருக்கிறது. இதற்கு ரிசர்வ் வங்கி, மத்திய அரசு, நிதி நிபுணர்கள் பல காரணங்களை அக்குவேறு ஆணிவேறாக அலசிக் கொண்டிருக்கின்றனர். ஆனால், 2010ல் அறிமுகமான ரூபாய் சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடுதான் காரணம் என்கிறார் ராஜ்குமார் ஜான்ஹரி. பிரபல வாஸ்து நிபுணரான அவர், 2010ல் ரூபாய் சின்னம் அறிமுகமான போதே அதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக கூறுகிறார். அவரது கருத்து இதோ: ரூபாய் சின்னம் ‘ஆர்’ என்ற ரோமானிய எண் மற்றும் இந்தியில் பயன்படுத்தப்படும் ‘ரா’ என்ற எழுத்துக்கான தேவநகரி மொழி கலந்த வடிவமாக உள்ளது. அதன் நடுவே இருக்கும் கோடு, வாஸ்து சாஸ்திரப்படி கழுத்தை அறுக்கும் கத்தி. அது ரூபாயை வெட்டிச் செல்வது போலிருக்கிறது. வாஸ்து சாஸ்திரத்தில் வடிவங்களுக்கு அதிக முக்கியம் தரப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரத்திற்கு எதிராக ரூபாய் சின்னம் இருப்பதால் ஆபத்து என்று அரசுக்கு கடிதம் எழுதியும் பதில் இல்லை. நடவடிக்கையும் இல்லை. ரூபாய் சின்னம் அறிமுகம் ஆன 2010ல் இருந்தே கரன்சி மதிப்பு சரிய தொடங்கியது. அது இன்று வரை நீடிப்பதே இதற்கு சாட்சி. ரூபாய் மதிப்பு சரிவுக்கு சர்வதேச காரணங்கள் பலவற்றை கூறலாம். ஆனால், 2009ல் ஏற்பட்ட சர்வதேச நிதி நெருக்கடி உட்பட இதற்கு முன் எத்தனையோ சூழ்நிலைகளிலும் ரூபாய் மதிப்பு இதுபோல சரிந்ததில்லை. இதிலிருந்தே ரூபாய் சின்னத்தில் உள்ள வாஸ்து குறைபாடு உண்மை என்பது புரியும். எனவே, ரூபாய் சின்னத்தை உடனடியாக திரும்ப பெற்று குறைபாடு இல்லாமல் வேறு உருவாக்க வேண்டும். இவ்வாறு ராஜ்குமார் ஜான்ஹரி கூறினார். ரூபாய் சின்னத்தை வடிவமைத்த சென்னையை சேர்ந்த உதய குமார் இதுபற்றி கூறுகையில், ‘நான் என்ன சொல்வது... 2 ஆண்டுக்கு முன்பே முடிவானது. இப்போது அப்படி சொல்வதா? எதுவானாலும் அரசே முடிவு செய்ய வேண்டும்’ என்றார்.

ha ha ha :) Curious to know his comments on $$$ :)
ReplyDeletehaha...எனக்கும் தலைல அடிச்சுக்கணும் போல இருக்கு...
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteNalla Commedy!!! Ask him check the vasuthu for Greece and Spain (Euro Currency ), They are in deep trouble than India!!!!
ReplyDelete