Wednesday, 13 June 2012

MIDWEEK INSPIRATION


பார்வைகள்  
பார்வைகள் என்றால் கண்பார்வைகள் அல்ல. வாழ்க்கைப்பார்வைகள் முதல் பார்வை பின்னோக்கிப் பார்த்தல்.
-
ஒரு மனிதனுக்குத் தான் கடந்து வந்த பாதைமீது பார்வை
எப்போதும் இருக்க வேண்டும். வந்த வழி தெரியாவிட்டாால்
போகிற பாதை புரியாது என்பார்கள். பழையதை நினைத்துப்
பார்க்காவிட்டால் வாழ்வில் நிதானம் என்பதே பிடிபடாது.-
கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர்கள் கடந்து வந்த பாதையை
எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப்
போக வேண்டியதுதான். நல்ல வளர்ச்சியிலும் வளர்வதற்குக்
காரணமாக இருந்த நான்கு பேர்கள் முதல் பத்துப் பேர்கள்
வரை அவ்வப்போது நினைவுக்கு வரவேண்டும்.
நன்றியின் வெளிப்பாடு மட்டுமல்ல. நம்மால் பிறருக்கு
இப்படி உதவ முடியுமா என்கிற உந்து சக்தியாகவும் இருக்கும்.


அடுத்து முன்னோக்கிப் பார்த்தல், தீர்க்க தரிசனங்களும்
வருங்காலத் திட்டங்களும் இல்லாதவர்களே நம்மில் பலராக
இருக்கிறார்கள். முன்னோர்க்குப் பார்வை இல்லாதது
எண்ணெய் இல்லாத விளக்கிறகுச் சமம். முன்னோக்கிய
பார்வைகளே நம்மை உற்சாகம் குன்றாமல் ஓடியாடி
உழைக்கும் ஊக்க மருந்தாகும்.
-
அடுத்து நம்மைச் சுற்றிய பார்வை நம்மைச் சுற்றி என்ன
நடக்கிறது என்கிற பார்வை இல்லாதவர்கள் தம் சுயங்களை
இழந்து போகிறார்கள். கூடவே ஓடி வருகிறவனின்
வேகத்தைப் பார்த்துதான் ஒருவனது ஓட்டப் பந்தய வேகம்
அதிகரிக்கும். தனியாக ஓடும்போது எப்படி வரும் வேகம்?
சூழ்நிலை அறிதலே நம்மைச் சுற்றிய பார்வையின் நோக்கம்.
-
இறுதியில் முக்கியமாக வருகிறது நமக்குள் பார்க்கவேண்டிய
பார்வை (look within) நாம் யார்? நம் ஆற்றல் என்ன?
நம் பலவீனங்கள் என்ன என்பதைக் கணித்தறியாதவர்கள்
மூடர்களே. know thyself என்பார்கள் ஆங்கிலத்தில்.
கலைகளுள் கடினமான கலை ஒருவன் தன்னைத்தானே
உணர்வதுதான்கண்களை மூடியபடி சிந்திக்கச் சிந்திக்க நமக்குள் நாம்
ஆழமாகப் பயணிக்கமுடியும். இந்தப் பயணமே எத்தகைய
சூழலிலும் வாழ்வைச் சுகமாக்க வல்லது!
-
====================================

நன்றி: லேனாவின்  ஒரு பக்கக் கட்டுரைகள

  1. மாணவர்களின் வளர்ச்சி... ஒரு பார்வை....
    1 – 3rd Std.: தினமும் படிக்கிறேண்டா...
    4th – 6th: கொஞ்சம் கஷ்டம்டா...
    7th – 9th: முக்கியமான கொஸ்டின் மட்டும்தான் படிக்கிறேண்டா...
    10th - +2: மைக்ரோ செராக்ஸ் எடுதுக்கலாமடா மச்சான்?
    UG: இன்னிக்கு என்ன எக்ஸாம்’டா?
    PG: என்னடா சொல்ற... இன்னிக்கு எக்ஸாமா? சொல்லவே இல்ல....


2 comments:

  1. Good article! Living in the "Present" is very important but that doesn't mean completely forgetting the "Past" and ignoring the "Future".
    This statment nails it - "கடந்து வந்த பாதையை
    எண்ணிப் பார்க்காவிட்டால் ஆட்டம் போட்டு அடங்கிப்
    போக வேண்டியதுதான்"

    ReplyDelete
  2. always liked reading Lena's short articles
    I never forget my solo student days here when i was helped by so many kind people, and do my best to return the kindness to the needy now...

    ReplyDelete