கடல்
சிஷ்யன் கஷ்டப்பட்டு ராமாயண சுலோகங்களைப் பல தினங்களாக மனம் செய்து
கொண்டிருந்தான். வெற்றி பெற முடியாததால் மனம் தளர்ந்தான்.
குருவிடம், "குருஜி! நான்
எவ்வளவு முயன்றும் அந்த உத்தம நூலில் ஒரு பகுதியைக் கூட மனனம் செய்ய இலயவில்லையே
என்ன செய்வேன்? தங்கள் அருள் வேண்டும்" என்றான்.
"சீடனே! நீ இனி தினமும்
மாலை கடற்கரைக்குச் சென்று அவை உன் காலில் படுவது போல இருட்டும் வரை நடை பயின்று
வா," என்றார்.
அவன் அவ்வாறே நடை பயின்று
வந்தான்.
பிறகு வந்த, "குருவே, நான்
இப்போது ராமாயண மனனத்தை மேற்கொள்ளலாமா? அது எனக்கு கைகூடுமா?"
என்றான்.
குரு கேட்டார். "சிஷ்யமா!
நீ ஒரு மாத காலமாக கடற்கைரையில் உலவினாய். உன் ஆரோக்யத்தையும் அழகையும் பார்.
வெகுவாக அபிவிருத்தி அடைந்திருப்பதை உணர்கிறாயா?"
"உணர்கிறேன்
ஸ்வாமி."
"ஆனால் நீ ஒரு தினமாவது
இந்தப் பெரிய சமுத்திரத்தை எப்படியாவது ஆசிரமத்துக்குக் கொண்டு போய்விட வேண்டும்
என்று நினைத்தது உண்டா?"
"இல்லை பிரபு!"
"ஏன்?"
"அது சாத்தியமானது அல்ல
என்பதை நான் அறிவேன்."
"ஆனால் உன் உடல் நன்றாகத்
தேர்ந்துள்ளது இல்லையா?"
"ஆமாம்."
"நீ அதற்காக
சந்தோஷப்பட்டு."
கடவுளுக்கு நன்றி
செலுத்து.
ராமாயணத்தை மனப்பாடம் பண்ண
முடியாவிட்டாலும் அதைப் படித்தால் உன்னை அறியாமலேயே உனக்கு நல்ல பலன்
ஏற்பட்டிருக்கும்.
ஆகவே, நீ ராமாயணம்
படிப்பதையும் மனனம் பண்ணும் முயற்சியையும் விடாமல் செய்துகொண்டிரு. மனனம்
ஆகாவிட்டாலும் வேறு பயன்கள் கட்டாயம் கிடைக்கும்!"
சிஷ்யனுக்கு தெளிவு
ஏற்பட்டது.
No comments:
Post a Comment