Tuesday 22 March 2022

அம்மாவின் டைரி .... 4

 கோலங்கள் 


வீட்டு வாசலில் தினமும் கூட்டிப் பெருக்கி, தண்ணீர் தெளித்து அவசியம் கோலம் போடவேண்டும். கோலம் போட அரிசி மாவு மட்டும்தான் பயன்படுத்த வேண்டும்.

பண்டிகைகளின்போது போடவேண்டிய கோலங்கள் என அம்மா எழுதியிருக்கின்றார்கள் - ஆனால் கோலங்களின் படங்கள் டைரியில் இல்லை.

பொங்கலுக்கு போட வேண்டிய கோலம்

மாட்டுப் பொங்கலுக்கு போட வேண்டிய கோலம் 

ரத்த சப்தமிக்கு போட வேண்டிய கோலம்

சித்ரா பௌர்ணமிக்கு போட வேண்டிய கோலம் 

சரஸ்வதி பூஜைக்கு போடவேண்டிய கோலம் மற்றும் 

கல்யாணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்குப் போடவேண்டியவை 

என பலவித கோலங்களை வரிசைப் படுத்தியிருக்கின்றார்கள்.

கோலங்களுக்குக்காக தனியே ஒரு பெரிய நோட்டில் பல நூறு கோலங்களை போட்டு வைத்திருந்தார்கள். அதில் மேற்சொன்ன பண்டிகைக்கு  கோலங்களும்  இடம் பெற்றிருந்தன. ஆனால் அந்த பெரிய நோட்  தற்போது கிடைக்கவில்லை.

அம்மா ரதசப்தமியன்று போடும் புதுமாதிரி கோலம் நினைவில் உள்ளது. 
அரிசி கோலமாவிற்குப் பதிலாக ஒரு செங்கல்லை உடைத்து தூளாக்கி பொடி செய்து அதில் தேர் கோலம் போட்டு வித்தியாசமான பார்டர் போடுவார்கள். அன்று எருக்கன் இலையை தலையில் வைத்து குளிக்கவேண்டும். கத்திரி இலையில்தான் சாப்பிட வேண்டும்.

மேற்சொன்ன விசேட கோலங்கள் கிடைத்தால் இங்கு பதிவிடுகின்றேன்.

No comments:

Post a Comment