Friday 25 March 2022

அரசன்குடியில் கிராமீய சேவைத் திட்டம்

 கடந்த திங்களன்று குரும்பலூர் கிராமீய சேவைத் திட்ட துவக்க விழாவின்போது, திட்டத்தை கிராம மக்களுக்கு எளிதில் புரியுமாறு நாட்டிய மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தித் தரும் உலக புகழ் பெற்ற திருச்சி அருமை கலைக்காரியாலயக் குழுவினர்  

" நாங்கள் இன்றுடன் 192  கிராம சேவைத் திட்ட நிகழ்ச்சிகள் முடித்துவிட்டோம். எங்களது 200வது நிகழ்ச்சியினை திருச்சியில் நடத்த விரும்புகின்றோம். இவ்வளவு நிகழ்ச்சிகளிலும் பங்குபெற்ற30 க்கும்   மேற்பட்ட கலைஞர்களை கௌரவிக்க திருச்சியில் கிராமம் கிடைத்தால் வசதியாக இருக்கு"மென வேண்டினர். 

அவர்கள் வேண்டுகோளுக்கிணங்க பெல் அறிவுத்திருக்கோயிலுக்கு  10 கி.மீ தொலைவில் கல்லணை செல்லும் வழியில் உள்ள  அரசன்குடி கிராமம் சேவைக்கென தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. 

துவக்கவிழா  அநேகமாக மே மாதம் நடைபெறலாம்.

கல்லணை

Kallanai Dam by King Karikalan 

Aerial View of all five irrigation systems 
1804 ல் பாசன வசதிக்காக தனியாக ஆங்கிலேயரால் ஒரு பொறியியல் ஆய்வாளர் நிறுவபட்டார். இந்திய நீர் பாசனத்தின் தந்தை என அறியப்படும் சர் ஆர்தர் காட்டன் என்ற ஆங்கில பொறியாளர் கல்லணையை பல ஆண்டுகாலம் ஆராய்ந்து தமிழனின்  கட்டிடக்கலையை கண்டு வியந்து போனார்.

அரசன்குடி கிராமம் பற்றி..       

2000 year old Sivan Temple

திருச்சியின்  பல்வேறு சிறப்புகளில் ஒன்று  கல்லணை. காவிரிநதியின் குறுக்கே கட்டப்பட்ட, உலகில் முதலாவது அணையே இந்த திருச்சியில் உள்ள கல்லணை தான். 2000 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி உறையூரைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி புரிந்த கரிகால் பெருவளத்தான் (கரிகாலன்) என்ற மன்னரே, அந்தக் காலத்திலேயே அதிசயிக்கத்தக்க தொழில் நுட்பங்களுடன், இன்றும் அசையாத உறுதி கொண்ட இந்த கல்லணையைக் கட்டினார்.

காவிரியில் அடிக்கடி பெருவெள்ளம் வந்து மக்கள் துயரப்பட்டதைக் கண்டு அதைத் தடுக்க காவிரியில் ஒரு பெரிய அணையைக் கட்ட முடிவெடுத்தான் கரிகால் பெருவளத்தான். ஒரு நொடிக்கு இரண்டு லட்சம் கனநீர் பாயும் காவிரியின் தண்ணீர் மேல் அணைக்கட்டுவதற்கும் ஒரு வழிமுறையைக் கண்டுபிடித்தார்கள் தமிழர்கள் .

நாம் கடல் தண்ணீரில் நிற்கும்போது அலை நம் கால்களை அணைத்துச் செல்லும். அப்போது பாதங்களின் கீழே குறுகுறுவென்று மணல் அரிப்பு ஏற்பட்டு நம் கால்கள் இன்னும் மண்ணுக்குள்ளே புதையும். இதைத்தான் சூத்திரமாக மாற்றினார்கள். காவிரி ஆற்றின் மீது பெரிய பெரிய பாறைகளைக் கொண்டுவந்து போட்டார்கள். அந்தப் பாறைகளும் நீர் அரிப்பின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக மண்ணுக்குள் போகும். அதன் மேல் வேறொரு பாறையை வைப்பார்கள். நடுவே தண்ணீரில் கரையாத ஒருவிதமான ஒட்டும் களி மண்ணைப் புதிய பாறைகளில் பூசிவிடுவார்கள். இப்போது இரண்டும் ஒட்டிக்கொள்ளும். இப்படிப் பாறைகளின் மேல் பாறையைப் போட்டு, படுவேகத்தில் செல்லும் காவிரி நீர் மீது கட்டிய அணைதான் கல்லணை.

கல்லணையின் அடிப்படைக் கட்டுமானம் அப்படியே இன்னும் நிலைத்திருக்கிறது. புதிப்பிப்பதும், பராமரிப்பதும் மட்டுமே அவ்வப்போது நடைபெறுகிறது. காலத்தால் அழியாத உறுதிமிக்க கல்லணையின் கட்டுமான தொழில்நுட்பம், தண்ணீர் மற்றும் மணல் குறித்த அறிவியல் அறிவு, தமிழர் தம் திறனுக்கு வியப்பூட்டும் ஒரு அதிசய சான்றாகும்.

கரிகாலன் கல்லணை கட்டிக்கொண்டு இருக்கும் பொது அணை சரியாக நிற்காமல் உடைந்து விழுந்து கொண்டே இருந்தது அப்போது மன்னன் இருந்த ஊர் தான் அரசன்குடி. அரசன் இவ்வூரில் தங்கியிருந்த போது சிவன் அரசன் கனவில் வந்து தனக்கு இவ்வூரில் கோவில் எழுப்பி வழிபாடு செய்துவிட்டு கல்லணை கட்ட தொடருமாறு கூறினார். சிவன் சொன்னபடி அரசனும்  ஒரு திருத்தலம் எழுப்பி சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை முடித்தார். 

அரசன்குடியில் இருந்து சிவனை வழிபட்டு கல்லணை கட்டும் பணியை பார்த்துக் கொண்டதால் இவ்வூர் அரசன்குடி என பெயர் பெற்றது.

இத்திருக்கோயில் அரசன்குடி சிவன் கோவில் என்று அழைக்கப்பட்டது. இக்கோவிலில் மன்னன் சிவனை வழிபடுவது போன்ற சிற்பங்களும் உள்ளது.

No comments:

Post a Comment