Wednesday, 29 June 2022

இடி மின்னல்

 இரண்டு மூலப்பொருள்கள் ஒன்றோடு ஒன்று உராய்வதாலும் மின்சாரம் உற்பத்தி ஆகும்நமது உடலில் 18 வகையான மூலப்பொருள்கள் உள்ளனஆகவே நமது கைகளை ஒன்றோடு ஒன்று தேய்க்கும் போது எலக்ட்ரான்கள் நகர்ந்து மின்சாரம் உண்டாகிறது.ஆகவே நமது கையானது சூடேறுகிறது.

காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் ஆகாயத்தில் மின்சாரம் உண்டாகிறதுஇந்த மின்சாரம் பூமியில் பாயும்போது இடிமின்னல் உண்டாகிறதுஇடி,மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டாலும் மின்னல் முதலில் நம் கண்ணுக்கு தெரியும்சிறிது நேரம் கழித்து இடி சத்தம் கேட்கும்காரணம் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு லட்சம் கிலோ மீட்டர் ஆகும்ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் ஆகும்.

இந்த மின்சாரம் உயரமான மரங்கள் கட்டிடங்கள் மூலமாக பூமிக்கு பாய்ந்து செல்வதால் மரங்கள் எரிந்து விடுகின்றது கட்டிடங்கள் இடிந்து விடுகின்றனஉயரமான பொருள் எதுவும் கிடைக்காத போது நமது தலையில் விழுந்துவிடும்ஆகவே பரந்த வெட்ட வெளியில் தனியாக செல்லக் கூடாதுதனியாக உள்ள மரத்தின் அடியில் நிற்க கூடாது.

உயரமான கட்டிடங்களின் மீது தடித்த கம்பிகளை பொருத்தி அதை பூமியுடன் இனைப்பு ஏற்படுத்தி எர்த் செய்து விடுவார்கள்கட்டிடத்தை இடி மின்சாரம் தாக்கும் போது மின்சாரம் வேகமாக பூமிக்கு சென்றுவிடும்அப்போது கட்டிடம் பதுகாப்பாக இருக்கும்கட்டிடத்தின் மீது அமைக்கப்படும் அந்த தடித்த கம்பிக்குப் பெயர் இடிதாங்கி எனப்படும்.

இடி மின்னலில் உண்டாகும் மின்சாரம் பல லட்சக்கணக்கான வோல்டு அழுத்தமுள்ளதாக இருக்கும்ஆகவே இதன் தாக்குதல் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தும்.

தென்கொரியர்களின் மொழி - தமிழ்

2019 ல் சிகாகோவில் நடைபெற்ற உலக தமிழ் மாநாட்டில் கலந்துகொண்ட தென்கொரிய நாட்டு தமிழ் பிரதிநிதியோடு 

சென்னையில் இன்று 4000க்கு மேற்பட்ட கொரியர்கள் வசிக்கிறார்கள். ஹூண்டாய், ஹூன் போன்ற பல நிறுவனங்களில் பணிபுரிபவர்களுடன் அவர்களது குடும்பங்கள்.

கொரிய மொழியில் பல தமிழ் வார்த்தைகள் இருப்பதையும், அது தமிழில் பேகசப்படுவது போலவே உச்சரிக்கப்படுவதை முதலில்  சொன்னவர்கள் பிரெஞ்ச் பாதிரியார்கள். இரண்டு நாடுகளிலும் பணிபுரிந்த பாதிரியார்கள் கண்டுபிடித்த விஷயம் இது. அன்று முதல் ஆய்வுகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது.  ஹவாய் பல்கலைக்கழகத்தின்  “கொரிய மொழி மையம்” இதுகுறித்து பெரிய அளவில் ஆய்வுகள் நடத்தி கட்டுரைகளை வெளியிட்டிருக்கிறது. இவர்கள் ஆய்வின் படி  கிட்டத்தட்ட  கொரிய மொழியில்  4000 தமிழ் வார்த்தைகள் இருக்கின்றன.  பல வார்த்தைகளின் பொருளும் அதேதான் மட்டுமில்லை ஒலிக்கும் பாணியும் உச்சரிப்பும் கூட தமிழ் போலவே இருப்பது தான் ஆச்சரியம்.

இரு நாடுகளுக்குமிடையே உள்ள உறவு முதல் நூற்றாண்டில் துவங்கியிருக்கிறது. சூரோ என்ற அரசன் கார்க் என்ற பகுதியை ஆண்டுவந்தார்.கார்க் என்ற சொல்லுக்கு  பண்டைய தமிழில் மீன் என்று பொருள். அந்த மன்னரின் கொடியில்  மீன் சின்னம். இருக்கிறது.  அவரும் அன்றைய பாண்டிய(வேளநாடு) மன்னர் ஆயியும் நல்ல நண்பர்கள்.  அவர்குடும்பத்தைச்சேர்ந்த ஒரு தமிழ் பெண்ணை  கார்க் நாட்டின் இளவரசர்      திருமணம் செய்துகொண்டதால்,  வணிகம்,  அரசுப்பணிகளில், படைகளில் நிர்வாகத்தில் தமிழர்கள் இணைந்திருக்கிறார்கள்.  பின்னாளில் சூரிரத்னா என்ற   அந்தப் பெண்  நாட்டின் அரசியாகியிருக்கிறார்.

 இன்றும் அவரது  சமாதி கிம்ஹே என்ற கொரிய நகரில் இந்த விபரங்கள் பதிக்கப்பட்ட கற்பலகையுடன் இருக்கிறது.    கொரியா நாட்டில் சொல்லா என்பது ஒரு மாவட்டத்தின் பெயர் இது சோழ என்ற  சொல்லின் திரிந்த வடிவம் என்று கருதப்படுகிறது. இது போன்ற பல விஷயங்களை ஆய்ந்து நிறைய எழுதியிருக்கிறார்கள் என். கண்ணன், ஒரிஸாபாலு,  நாகராஜன் போன்ற  வரலாற்று ஆய்வாளர்கள்.
"மொழி மட்டுமில்லை கலாச்சாரத்திலும் நிறைய ஒற்றுமைகள். கொரிய குழந்தை முதலில்; அறிந்து கொள்ளும் வார்த்தைகள் அப்பா, அம்மா தான். என்பது மட்டுமில்லை. குழந்தையைத் தொட்டிலில் இடுவது, வாசலில் மாவிலைத் தோரணங்கள் கட்டுவது, போன்ற பல விஷயங்களில் தமிழ் நாட்டைப் பார்க்கிறேன். தென்கொரியாவில் மாங்காய் கிடையாது. அதனால் மிளகாய் தோரணம் கட்டுகிறார்கள்.  குழந்தைக்குத் திருஷ்டி கூடாது என்ற பழக்கமும் இருக்கிறது".  என்கிறார்  கொரிய தூதர் குயூங்குசூ கிம்  . இவர்  தமிழ் நாட்டில் ஆர்வத்துடன் பல விஷயங்களைக் கூர்ந்து கவனித்து   தனது கட்டுரைகளில் எழுதுகிறார்.. அவர் சொல்லும் பல விஷயங்களில் ஒன்று தமிழக கிராமங்களில் இருப்பது போலத்தான் கொரிய கிராமங்களில் குடிசைகள் அமைக்கப்படுகின்றன. உரலுக்கும்  உலக்கைக்கும்  அதேபெயர்கள், அதே பயன்கள் என்பது தான்.  இப்போது தமிழ் கற்றுவரும் இவர்  தமிழ் இலக்கணம் எழுவாய்- செயப்படுபொருள்- வினைச்சொல் அடிப்படையில் தான் கொரிய மொழியின் இலக்கணமும் இருக்கிறது  என்கிறார்.  கொரியர்களும் தமிழர்களைப்போல் அத்தை, மாமன், தாய்மாமன் உறவு முறைகளும் அதில் திருமணமும் செய்துகொள்கிறார்கள்.( சண்டைகள் வருவதும்  உண்டாம். )

பல ஆண்டுகாலம் சீன மொழியைப் பயன்படுத்திய கொரியநட்டினர் 10ஆம் நூற்றாண்டில் ஹங்குல் என்ற மொழியை தாய் மொழியாக ஏற்றனர். இது தமிழ்மொழியின் சாயலில் இருக்கிறது. இந்த ஹங்குல் மொழியை ஏற்றபின்னர்தான் கொரியமக்களின் பொருளாதாரம் வேகமெடுத்திருக்கிறது. இன்று கொரியாவில் 99%மக்கள் கல்வியறிவு பெற்றிருக்கிறார்கள். மொழியை முன்னிறுத்தியே  எந்த ஒரு நாடும் முன்னேறும் என்பதற்கு  இது சான்று என்கிறார். இவர் செம்மொழி மாநாட்டில் பங்கேற்று இது குறித்த தனது கட்டுரையை வாசித்தவர்.
கொரிய மொழியில் பல வார்த்தைகள் தமிழ் சாயலில் இருக்கிறது. உரத்துக்கு- உரம், கண்ணுக்கு -நுகண், பல்லுக்கு =இப்பல் புல்லுக்கு =புல் எனப் பல வார்த்தைகளில் அதே பொருளில் இருப்பதை விட ஆச்சரியம் அவர்கள் தூரி, தூரி, சாஞ்சுக்கோ, கொஞ்சு ஜம்ஜம், அபூபா, ஜோ ஜோ  என  சிறு குழந்தைகளைக் கொஞ்சுவதில் கூடத் தமிழ் கொஞ்சுகிறது. மொழி, கலாச்சாரம் போல சில உணவு வகைகளையும் தோசை, கொழுக்கட்டை  சுண்டல்  ஊறுகாய் போன்றவற்றிலும்  தமிழ்நாடு இருக்கிறது.

 


வெற்றிலை

வெற்றிலையை நாம் அடிக்கடி பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்துகிறோம். வெற்றிலை இந்திய கலாச்சாரத்தில் பெரிதும் மதிக்கப்படுகிறது. மத நிகழ்வுகள், திருமணம் மற்றும் பூஜைகளில் இது கட்டாயம் பயன்படுத்தப்படுகிறது. வெற்றிலை ஏராளமான மருத்துவ மற்றும் பிற ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது. இதில் குறைந்த கொழுப்பு மற்றும் மிதமான புரத உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. இது அயோடின், பொட்டாசியம், வைட்டமின் ஏ, வைட்டமின் பி1, வைட்டமின் பி2 மற்றும் நிகோடினிக் அமிலம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்த நிலையில் வெற்றிலையை மென்று தின்பதால் விறைப்புக் கோளாறு முதல் இன்னும் சில நோய்களும் சேர்ந்து தீருமாம். இதை தினமும் சாப்பிட்டால் உடல் ஆரோக்கியம் பலப்படும் என்பது வெகு சிலரே அறிந்திருப்பார்கள். எனவே இந்த தொகுப்பில் வெற்றிலையின் மருத்துவ குணங்கள் என்னவென்று விளக்கமாகப் பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

வெற்றிலையை மெல்லுவதால் கிடைக்கும் நன்மைகள்

* வெற்றிலையின் உள்ளே ஆன்டி-ஆக்ஸிடன்ட், ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் உள்ளன. இதனை உட்கொள்வதன் மூலம் இருமல் பிரச்சனையை சமாளிக்கலாம். மேலும் இதை உட்கொள்வதால் தொண்டையை நாம் சுத்தமாக வைத்துக் கொள்ளலாம்.

* வெற்றிலை அடிபட்ட உடல் காயத்திற்குச் சிறந்த மருந்தாக விளங்குகிறது. காயம் விரைவாகக் குணமடைய வெற்றிலை பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளதால் வழக்கத்தைவிட அதிகமாகக் காயம் குறைய உதவுகிறது.

* வெற்றிலை வயிறு மற்றும் அஜீரண கோளாற்றைச் சரி செய்யப் பெரிதும் உதவுகிறது. வெற்றிலையில் இயற்கையாக உள்ள வேதிப்பொருட்கள், பெருங்குடல் காற்று நீக்கியாகச் செயல்படுகிறது.

எப்படி பால் காய்ச்ச வேண்டும்?



 "பால் காய்ச்ச தெரியுமா?' 

உணவியல் நிபுணர் ஷைனி சந்திரன்: பாலை பலமுறை சுட வைப்பது மிகத் தவறான பழக்கம். 

காய்ச்சிய பாலை2- நிமிடங்களுக்கு மேல் நீண்ட நேரம் சுட வைக்கும் போது, அதில் உள்ள வைட்டமின், பி காம்ப்ளக்ஸ் சத்துக்களான, பி1, பி2, பி12 ஆகியவை ஆவியாகிவிடும். கால்சியம், வைட்டமின் சத்துக்களுக்காகத்தான் பால் குடிக்கிறோம். ஆனால், பாலை அடிக்கடி சுட வைப்பதால், அந்த சத்துக்கள் வீணாகிவிடும். பால் குடிப்பதும் வீண் தான். பசும் பாலில் தீங்கு தரும் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமிகள் இருக்கும். அவை காய்ச்சும் போது அழிந்துவிடும். இன்று பெரும்பாலும் பாக்கெட் பாலை வாங்குகிறோம். அது ஏற்கனவே, சுத்தம் செய் யப்பட்ட பின் தான், பாக்கெட்டுகளில் அடைக்கப்படுகிறது என்பதால், அதை நீண்ட நேரம் காய்ச்ச வேண்டும் என்ற அவசியமில்லை. பாலைக் காய்ச்சியதும் குடித்து விடலாம். ஆறவிட்டு, மீண்டும் சூடாக்கி, சத்துக்களை அழித்த பாலைக் குடிப்பதைத் தவிர்க்கலாம். 

பசும் பால் வாங்குபவர்கள், பால் பொங்கியதும், உடனே இறக்கி விடாமல், 8-10 நிமிடங்கள் காய்ச்ச வேண்டும். கரண்டியால், பாலைக் கிளறிக்கொண்டே இருக்க வேண்டும். 

அப்போது தான் பால், 100 டிகிரி செல்சியஸ் வரை சூடாகி, தீங்கு தரும் பாக்டீரியாக்கள் அழியும். பதப்படுத் தப்பட்ட பாக்கெட் பாலில் ஏற்கனவே, பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டிருப்பதால், 

அதை, 6 - 8 நிமிடங்கள் சூடு செய்தால் போதும். பொதுவாக எந்த வகைப் பாலாக இருந்தாலும், அதை இரண்டு முறைக்கு மேல் சு  வைக்க வேண்டாம். ஒருமுறை பாலைக் காய்ச்சியபின், அதை பிரிஜில் வைக் கலாம். காபி, டீ என தயார் செய்யும்போது, மீண்டும் மொத்தப் பாலையும் காய்ச்சாமல், எத்தனை டம்ளர் தேவைப்படுகிறதோ, அந்தளவிற்கு  மட்டும் பாலை எடுத்து தயார் செய்யலாம்.



Tuesday, 28 June 2022

கண்ணதாசன் கிண்டல்

 


ஒருமுறை கவிஞர் கண்ணதாசனிடம் அவரது துணைவியார் பார்வதி அம்மாள் சென்று   “நான் மோதிரம் செய்து அணிந்துக் கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.  மோதிரத்தில் அச்சடிக்க உங்கள் கைப்பட ‘
பார்வதி கண்ணதாசன்’  என்று எழுதிக் கொடுங்கள்” என்று கேட்டிருக்கிறார்.

அவரும் தன் மனைவியின் விருப்பப்படியே தன் கைப்பட எழுதிக் கொடுக்கிறார். அவர் மனைவியும் அதனை மகிழ்ச்சியுடன் வாங்கிக் கொண்டு சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து அவரை மீண்டும் அழைத்து ” நான் எழுதியதை சரியாக வாசித்தாயா..?” என்று புதிர் போட , அந்த வாக்கியத்தை மீண்டும் பார்வதி அம்மாள் படித்துப் பார்க்கிறார்.

அதில் “பார் அவதி கண்ணதாசன்” என்று எழுதி இருக்கிறது.

கல்யாணமான அத்தனை புருஷன்மார்களும் நம்மை போலவேதான் அவதிபடுகிறார்கள் போலிருக்கிறது.

என்ன இருந்தாலும் கவிஞர் கண்ணதாசன் அனுபவக் கவிஞர் அல்லவா..?

நீண்டநாள் வாழ தேரையர் அறிவுரை

 தேரையர் பற்றி தெரிந்துகொள்ள கீழே உள்ள LINK கினை சொடுக்கவும் 

தேரையர் 

நீண்ட ஆயுளுடன் வாழ தேரையர் சித்தரின் அறிவுரைகள்.

காடு, மலைகளில் வாழ்ந்த சித்தர்கள் நூற்றாண்டுகளை கடந்தும் வாழ்தார்கள். நோய்கள் அவர்கள் அருகே வர அஞ்சியது. தங்கள் ஆயுள் ரகசியத்தை அவர்கள் சொல்லி இருந்தாலும், நாம் தான் அதன்படி  வாழ மறுக்கிறோம். 

 

18 சித்தர்களில் ஒருவரான தேரையார் 
எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு 
பட்டியலே இடுகிறார்.

மனிதன் எதை மட்டும் செய்ய வேண்டும் என்பதற்கு அவர் இப்படி சொல்கிறார் :

Ø     பால் உணவு உட்கொள்ளுங்கள்.
Ø     எண்ணெய் தேய்த்து குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள்.
Ø    படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்து 
படுங்கள்.
Ø     புளித்த தயிர் உணவை விருப்பி உட்கொள்ளுங்கள்.
Ø     பசிக்கும்போது மட்டுமே உணவை உட்கொள்ளுங்கள்.
Ø    ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டுமே உணவு உட்கொள்ள 
வேண்டும்.
Ø    இரவில் நன்றாக தூங்குங்கள்.
Ø    பெண்ணுடன் மாதம் ஒருமுறை மட்டுமே உறவு வைத்துக்கொள்ள வேண்டும்.
Ø    வாழைக்காயை உணவுக்கு பயன்படுத்தும்போது பிஞ்சிக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும் .   முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக்கூடாது.
Ø    உணவு உட்கொண்ட உடனேயே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.
Ø    6 மாதத்திற்கு ஒருமுறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.
Ø    4 மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.
Ø    11/2 மாதத்திற்கு ஒருமுறை மூக்கிற்கு மருந்திட்டு சளி போன்ற நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
Ø    வாரம் ஒருமுறை முகச்சவரம் செய்துகொள்ள வேண்டும். ( இது ஆண்களுக்கு மட்டும் )
Ø    4 நாட்களுக்கு ஒருமுறை எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.
Ø    3 நாட்களுக்கு ஒருமுறை கண்ணுக்கு மை இட வேண்டும். (பெண்களுக்கு மட்டும்)
Ø     விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.

இவற்றை எல்லாம் ஒருவர் தனது வாழ்நாளில் பின்பற்றி வந்தால் எமன்அவரை நெருங்கி வரவே  பயப்படுவான் என்கிறார் தேரையார்.

எவற்றை எல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு தேரையாரின் அறிவுரை :

Ø  பகலில் உடலுறவு கொள்வதையும், தூங்குவதையும் தவிர்த்து விடுங்கள்.
Ø  கரும்பு போன்ற இனிப்பவர்களாக இருந்தாலும் வயதில் மூத்த பெண்களுடனும் இனிய வாசம் தரும் தலைமுடியைக் கொண்ட விலைமாதர்களுடன் உடலுறவு கொள்ளாதீர்கள்.
Ø  காலை இளம் வெயிலில் அலையாதீகள்.
Ø  மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைத்திருக்காதீர்கள்.
Ø  முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ணவேண்டாம்.
Ø  உலகமே பரிசாக கிடைக்கிறது என்ற போதும், பசிக்காத போது உணவு உட்கொள்ளாதீர்கள்.
Ø  உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும், இடைஇடையே தண்ணீர் குடிக்கக்கூடாது.
Ø  மயக்கும் மனம் வீசும் கந்தம், மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக்கூடாது .
Ø  மாத விலக்கான பெண்கள், ஆடு, கழுதை போன்றவை வரும் பாதையில் எழும் புழுதி உடல்மேல் படும்படி நெருங்கி நடந்து செல்லாதீர்கள்.
Ø  இரவில், விளக்கு வெளிச்சத்தில் நிற்பவர் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதை தவிர்த்திடுங்கள்.
Ø  பசியின் போது உணவு உட்கொண்ட உடனேயும் உடலுறவு வைத்துக்கொள்ளாதீர்கள்.
Ø  மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல், அளவுக்கு மீறிய காமச் செயல்களில் ஈடுபடுதல், அழுக்கான ஆடை அணிந்திருத்தல், தலையை வாரி முடி உதிரச்செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள்.
Ø  மற்றவர்கள் கை உதறும்போது அவர்களது நகத்திலிருந்து விழும் தண்ணீரும், குளித்து தலை துவட்டும் போது உதிரும் தண்ணீரும் மேலே தெரித்து விழும் இடத்தில் நடக்காதீர்கள்.

இப்படி சொல்கிறார் அவர்.

தேரையார்
 சித்தர் கூறிய அனைத்தையும் ஒரே நாளில் பின்பற்றுவது என்பது இயலாத காரியம்.  ஏனென்றால், நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருக்கிற வாழ்க்கை அப்படி. அதனால், 
படிப்படியாக முயற்சிப்போம். நோய், நொடியின்றி நாளும் நலத்தோடு வாழ்வோம்.