Sunday, 6 May 2012

தேரையர்


சித்தர்களப் பத்தி சொல்ற கதைங்க எல்லாமே ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்..இன்னிக்கி தேரையர் பத்தி தெரிஞ்சிக்கப் போறோம்.
இவரு அகத்தியர் காலத்தவரு..இவரப் பத்தி நெறைய கதைங்க இருந்தாலும் இவருக்கு ஏன் இந்த பேரு வந்துச்சிங்கிரதைத்தான் இப்ப சொல்லப் போறேன் - 
அகத்தியரோட முக்கியமான சீடர் தொல்காப்பியர்*
அவருக்கு தீராத தலைவலி..தாங்க முடியல..என்னென்னவோ பண்ணி பாத்தும் சரியாகல.தன்னோட குருநாதர் கால்ல உழுந்தாரு...அகத்தியரும் தன்னோட ஞான திருஷ்டியில தலைவலியோட காரணத்த கண்டுபுடிச்சாரு..சிஷ்யனோட மூளைக்குள்ள ஒரு தேரை ( தவளை )
உக்காந்து தலைவலி கொடுத்துக்கிட்டிருக்கு..
தவள எப்படி மண்டைக்குள்ளப் போச்சு?

தொல்காப்பியருக்கு  ஜலநேத்தி  பயிற்சி உண்டு.. மூக்குல ஒரு நாசி வழியா தண்ணிய உட்டு இன்னொரு நாசி வழியா வெளிய எடுக்குறது.. இப்படி அவரு ஒருநா பண்ணும்போது யூஸ் பண்ணுன தண்ணியில தேரை முட்டை இருந்துருக்கு..அந்த முட்டை ரொம்ப, ரொம்ப சின்னதா இருந்ததால நாசி வழியா அவரோட மூளைக்குள்ள போயி அங்க வளந்து பெரிசாயிடுச்சி..
அகத்தியரு தன்னோட சிஷ்யனக் காப்பாத்த சர்ஜரி பண்ண முடிவு பண்ணுனாரு..பாண்டிய மன்னனோட மருத்துவமனையில தொல்காப்பியருக்கு மயக்க மருந்து கொடுத்து கபாலத்த ஓபன் பண்ணி பாத்தா ஒரு தேரை மூளையை புடிச்சுக்கிட்டு உக்காந்திருக்கு


அகத்தியர் ஒரு குறடை எடுத்து தேரையை பிடித்து எடுக்க நெனைச்சாரு..
அப்ப  இன்னொரு சீடர் பொன்னரங்கன் ( சில பேர் ராமதேவன்னும் சொல்லுவாங்க )  அகத்தியர் கிட்ட " இப்படி பண்ணுணீங்கன்னா தேரை இவரோட மூளையை பிச்சிக்கிட்டு வந்துடும்.டாமேஜ் அதிகமாயிடும் " ன்னு சொல்லிட்டு ஒரு பாத்திரத்துல தண்ணியை எடுத்துக்கிட்டு அத தேரை கிட்ட கொண்டு வந்தாரு..  தண்ணியப் பாத்த தேரை ஒரே ஜம்ப்ல பாத்திரத்துக்குள்ள குதிச்சுது..தொல்காப்பியர் மூளைக்கு சேதாரம் இல்லாம மறுபடியும் கபாலத்த மூடி தையல் போட்டாங்க..


சரியான ஐடியா கொடுத்து காப்பாத்துன பொன்னுரங்கனுக்கு ( ராமதேவனுக்கு )  அகத்தியர் தேரையர்  ன்னு பட்டம் கொடுத்து பாராட்டினாரு..

தேரையரு நெறையா வைத்திய நூலு எழுதியிருக்காரு.. சமையலுக்கு பயன்படுகிற எல்லா பொருட்களையும் பத்தியும்  எல்லா காய்கறிகளோட குணங்களப் பத்தியும் பாட்டா சொல்லியிருக்காரு.. இவரோட " பதார்த்த குணசிந்தாமணி "   ரொம்ப ஃபேமஸ்.. 
பூமியில கிடைக்குற தண்ணிய 18  பிரிச்சு
ஒவ்வொரு தண்ணியோட குணநலன்கள், மருத்துவத் தன்மை இதெல்லாம்  ஆராய்ஞ்சு பாடல்கள் எழுதியிருக்காரு.. இவரோட பாடல்கள்ல அழகு  குறிப்புகளும் இருக்கு! 
தேரையர் ஆராய்ச்சி பண்ணின 18 வகை நீர் -  
 1 . மழைநீர்
2 -
ஆலங்கட்டி நீர்
3 -
பனிநீர்
4 -
ஆற்றுநீர்
5 -
குளத்துநீர்
6 -
ஏரிநீர்
7 -
சுனைநீர்
8 -
ஓடைநீர்
9 -
கிணற்று நீர்
10 -
ஊற்றுநீர்
11 -
பாறைநீர்
12 -
அருவிநீர்
13 -
அடவிநீர்
14 -
வயல்நீர்
15 -
நண்டுக்குழி நீர்
16 -
உப்புநீர்
17 -
சமுத்திரநீர்
18 -
இளநீர்

ஔவையார் மாதிரி நெறைய்ய தேரையர்களும் இருந்திருக்காங்க!

* சிலபேர் சொல்ற கதையில தொல்காப்பியருக்குப் பதிலா அந்த நாட்டு மன்னன் தலைவலியால கஷ்டப்பட்டான்னு இருக்கும்


8 comments:

  1. how appropriate...என் மூளைகுள்ளையும் ஒரு தேரை உக்காந்துட்டு தொல்லை கொடுக்குது... need தேரையர் right now!!

    ReplyDelete
    Replies
    1. Pl start doing meditation. The Kundalani snake will be awakened and once it goes to your head it swallows the frog!

      Delete
  2. "Brain Surgeon" அகத்தியர் :) Very interesting and amusing story! JP, if we were so advanced 1000s of years ago, then what happened to all that knowledge??

    ReplyDelete
    Replies
    1. The knowledge is still available. Dedication, sacrifice,etc are required

      Delete
  3. Interesting JP,

    Sundu, I was wondering samething, when I asked the same question when Jp started writing about Sithars, he mentioned during British period we lost this.

    JP, is there a book for all Sithars?

    ReplyDelete
    Replies
    1. There are thousands of books on Siththars & hundreds of websites

      Delete
  4. Its really interesting!!!! heard some stories about finding non-living things inside our body like watches, pearls..... and drs try to remove after they confirm their presence throu x-rays...etc but, this 'தேரையர்' story is really interesting....

    Also, 18 types of water....wow..Sithars are really great!!!

    ReplyDelete
    Replies
    1. There are more & more interesting stories on Siththars.

      Delete