Tuesday, 22 May 2012

காதல் டெஸ்ட்

காதல் டெஸ்ட் 

நீங்கள்  காதல் வயப்பட்டவரா?
டெஸ்ட் பண்ணிப் பார்க்கலாமா?
கீழே உள்ள கேள்விகளுக்கு  உண்மையாக, மிக  நிச்சயமான உண்மையாக  அல்லது
உண்மை இல்லையா என்று பதில் சொல்லுங்கள். 
உண்மையில்லைஎனில்  ஒன்றிலிருந்து மூன்று வரையிலும்
உண்மை எனில் நான்கு முதல் ஆறு வரையிலும்
மிக,மிக உண்மை எனில் ஏழு முதல் ஒன்பது வரையிலும் உங்கள்  பதில்களுக்கு ஏற்ப  மார்க்  போட்டுக் கொள்ளுங்கள்.

1.. நீ என்னைப் பிரிந்தால் செத்தே போய்விடுவேன்!

2. சில சமயம் என் எண்ணங்களை கட்டு படுத்தவே முடியவில்லை. எப்போதும் உன்னையே நினைத்துக் கொண்டிருக்கின்றேன்.

3. உனக்கு சந்தோசம் என்றால் எனக்கும் சந்தோசம்.

4. மற்றவரை விட உன்னுடனே இருக்க விரும்புகின்றேன்

5. நீ வேறு யாரைப் பற்றிப் பேசினாலும்  எனக்கு பொறாமையாய்  இருக்கின்றது

6. உன்னைப் பற்றி எல்லாம் அறிய ஆவல்

7. நீ எனக்கு எப்போதும் வேண்டும்

8. உன் பிரியத்தை முடிவின்றி விரும்புகின்றேன்

9. நீ தொட்டால் எனக்கு த்ரில்லாக  இருக்கின்றது

10. நீதான் எனக்கு எல்லாவிதத்திலும் எனக்கு ஏற்றவள்/ஏற்றவன்
மார்க்  கூட்டிப் பாத்தாச்சா ?  எவ்வளவு?
 
80லிருந்து     90வரை  -  காதல் பிசாசு

70லிருந்து     80வரை  -  காதல்  பைத்தியம் 

60லிருந்து     70வரை  -  காதல்  உண்டு 

50லிருந்து     60வரை  -  காதலிக்கலா4ம் 

40லிருந்து     50வரை  -  ஒக்கே 

  நாப்பதுக்கும் கீழே      ம்ஹீம்

(விகடனில் அந்த காலத்தில் சுஜாதா எழுதிய கட்டுரையிலிருந்து )



4 comments:

  1. I'm neither a பிசாசு nor a பைத்தியம், wouldn't want to be either, and also wouldn't want anyone to be பிசாசு or பைத்தியம் about me....
    love/'anfu' ஒன்றே போதும்... :)

    so JP...what are you?? பிசாசு or பைத்தியம்??? :)

    ReplyDelete
  2. True! Real test of Love is when the lovers are not together :))

    ReplyDelete