நேத்து சாயந்திரம் ஃபிரிட்ஜ்ல இருந்த ஒரு டப்பாவை திறந்து பாத்தேன்...
இன்ப அதிர்ச்சி!
ஒரு சின்ன மாவிளக்கு அதில் இருந்தது..
மறந்தே போய்விட்ட, சாமிக்கு படைக்கின்ற நைவேத்தியம்..
ஐயப்பன் என்கின்ற எங்கள் வீட்டுக்கு வரும் பையன் அவன் ஊரில் அம்மன் கோவிலில் தீ மிதித்து வழிபட்டு கொண்டுவந்து கொடுத்த பிரசாதம்.
மாவிளக்கு சாப்பிட்டு இருபத்தைந்து வருசத்துக்கு மேல இருக்கும்..
மாயரத்தில இருந்தப்ப மாசம் ஒருமுறை மாவிளக்கு கிடைச்சுகிட்டே இருக்கும்..அப்புறம் இங்க வந்தப்புறம் ஸ்ரீராமுக்கு மொட்டை அடிச்சப்ப மாவிளக்கு பண்ணி படைச்சாங்க..
அப்ப சாப்பிட்டது... அப்புறம் மாவிளக்கு மறந்து போச்சு..
தமிழ்நாடு முழுக்க மாவிளக்கு ஏத்தி சாமிக்கு, குறிப்பாக அம்மனுக்கு படைக்கின்ற வழக்கம் இருக்கு, இங்க பெண்களுக்கு எந்த பிரச்சனை வந்தாலும் " உன் கோவிலுக்கு வந்து மாவிளக்கு ஏத்தி வைக்கிறம்மா, மகமாயி, எங்களைக் காப்பாத்து " ன்னு வேண்டிக்கற பழக்கம் இருக்கு.
வயத்துவலி வந்தவங்க சாமிக்கு வேண்டிகிட்டு அம்மன் சன்னதியில படுத்துகிட்டு தங்கள் வயத்து மேல மாவிளக்கை ஏத்தி வழிபடுவாங்க. குறைஞ்சது ஒரு நாழிகை நேரம் படுத்துக்கிட்டுருக்கணும்.
சில கோவில்ல மாவிளக்கு பண்றதுக்குன்னு உரல், உலக்கை போன்றவை இருக்கும். சிலர் வீட்டுலேயே பண்ணி கொண்டாந்துடுவாங்க. கோவில்ல பாத்தா பல டிசைன்ல மாவிளக்க புடிச்சு வச்சிருப்பாங்க.
conical shape ல பண்ணி மேல ஒரு எலுமிச்சம்பழத்தவச்சு அமுக்கி அகல் மாதிரி பண்ணி அதுல நெய் விட்டு விளக்கேத்துவாங்க. பொதுவா எல்லாரும் வெல்லத்துல மாவிளக்கு பண்ணுவாங்க. சில பேர் ஜீனியில வெள்ளைக் கலர்ல பண்ணுவாங்க.
மாவிளக்கு தத்துவம் என்னன்னு தெரியல..but சாப்பிட ஒரு taste யான பிரசாதம்!
கிராமீய சாமி பாடல்ன்னா அதுல பச்சரிசி, பொங்கல், மாவிளக்கு போன்ற வார்த்தைகளை அதுவும் இளையராஜா பாடல்கள்ல நிறைய காணலாம்.
பச்சரிசி மாவிடிச்சி
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சி
பாவு வச்சி பாவு வச்சி
சுக்கிடிச்சி மௌகிடிச்சி
மௌகிடிச்சி மௌகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேணும் காக்க வேணும் டோய்........!.
மாவிடிச்சி மாவிடிச்சி
சக்கரையில் பாவு வச்சி
பாவு வச்சி பாவு வச்சி
சுக்கிடிச்சி மௌகிடிச்சி
மௌகிடிச்சி மௌகிடிச்சி
பக்குவமா கலந்துவச்சி
கலந்துவச்சி கலந்துவச்சி
அம்மனுக்கு மா விளக்கு
எடுத்து வந்தோம் எடுத்து வந்தோம்
அம்மன் அவ எங்களையும்
காக்க வேணும் காக்க வேணும் டோய்........!.
( ஞாபகம் வருதா... ராமராஜன் படத்துல வர்ற ஃபேமஸ் பாட்டு..)
i know மாவிளக்கு as மொட்டை அடிக்கிற பிரசாதம்.....can still feel the nostalgic taste in my mouth :P
ReplyDeletecan't remember the last time i ate it
forgot to add that I like the song...மதுர மரிகொழுந்து வாசம்...
ReplyDeletebut can't stand Ramarajan
First அல்கா பலாரம்; இப்ப மாவிளக்கு; ஏன் JP இப்படி நம்ம மண் வாசனையை கிளப்பிவிடுறீங்க :)) Could someone post the actual recipe for மாவிளக்கு? Don't tell me Ramarajan song is the recipe :))
ReplyDelete