மார்ச் மாசம் ஆப்பிள் அறிமுகப்படுத்திய புதிய ஐபாட் மூணே நாள்ல முப்பது லட்சம் வித்துப் போச்சாம்.
இன்னிக்கி நெறைய பேரு காதுல விதவிதமா மாட்டிக்கிட்டு பாட்டு கேட்டுகிட்டு போறாங்க..
கிராமபோனிலிருந்து ஐபாட் வரைக்கும் கடந்த நூறு வருசங்கள்ல எவ்வளவு மாற்றங்கள்..!
நாம எல்லோருமே எடிசனுக்கு ( தாமஸ் ஆல்வா ) நன்றி கூற கடமைப் பட்டுள்ளோம். அவர்தான் ஒலியை ( சத்தத்தை ) பதிவு செய்து மீண்டும் அதைக் கேட்கும்படியான கண்டுபிடிப்பை நிகழ்த்தினார்.
உலகமே வியந்து பாராட்டிய அற்புதக் கண்டுபிடிப்பு..இதிலே நாம் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம் -
இந்த சாதனையை நிகழ்த்திய எடிசனுக்கு காது கேட்காது என்பதுதான்!
பின் எப்படி அவர் கிராமபோனைக் கண்டுபிடித்தார்?
ஆம்பிளிபாயரிலிருந்து வரும் ஒயரை தன பற்களால் கடித்துக் கொண்டு அதிலிருந்து வரும் அதிர்வுகளை தன முகத்திலே, தாடைகளிலே துல்லியமாக உணர்ந்தாராம். காது கேட்காமலேயே ஒரு கிராமபோனை தவறில்லாமல் வடிவமைத்தார். அவருக்கு காது கேட்டிருந்தால் இவ்வளவு சிறப்பாக டிசைன் செய்திருக்கமுடியாதாம்!
காது கேட்கவில்லை என்ற பலவீனம் எடிசனுக்கு
பலமாக மாறி சாதனை புரிய வைத்திருக்கின்றது.
Will Power இருப்பவர்களுக்கு பலவீனமே பலம்!
No comments:
Post a Comment