Tuesday 15 May 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 4


மாவடு 

சின்ன வயசுலே  மோர், தயிர், வெண்ணை இதெல்லாம் சாப்பிடப் பிடிக்காது..பெரியண்ணனும் இத சாப்பிட மாட்டாங்க..ஸ்ரீராமுக்கும் தயிர்ன்னாலே அலர்ஜி மாதிரி..
எங்க பரம்பரை மரபணுவுல ஏதோ ஒரு பதிவு ஏற்பட்டு அது இன்னும் வந்துகிட்டுருக்கு..

அம்மா எனக்கு தயிர்சாதம் கொடுக்க எனக்கு பிடித்த மாவடு ஊறுகாயை  வச்சு " மாதா ஊட்டாத சோறை மாங்கா ஊட்டும்ன்னு சொல்லி நெறைய தடவ  
ட்ரைப் பண்ணிப் பாத்துட்டு உட்டுட்டாங்க.. ஆனா நான் மாவடுவை சாம்பார்
சாதத்துக்கு தொட்டுக்க ரொம்ப லைக் பண்ணுவேன்.

காலேஜ்ல படிக்கும்போதுதான் மோர், தயிர் யூஸ் பண்ண ஆரம்பிச்சேன்!
ஸ்ரீராமும் இப்பதான் இதெல்லாம் ட்ரை பண்றான்.

மாவடு ஊறுகாய் போடுறது ஒரு கலை. இத மாச கணக்குல வச்சுக்கலாம்.
தயிர் சாதம் மாவடு காம்பினேசன் ரொம்ப பேமஸ்..( பேக்ரவுண்ட்ல ' அட என்னாத்த சொல்வேனுங்க..வடுமாங்கா ஊறுதுங்கோ.' பாட்டைப் போட்டுக்கிட்டு மேல படிங்க.)
சுண்டைக்காய் சைஸ் மாவடுதான் சரியா வரும்ன்னு மாசி மாசம் ( அதாவது பிப்ரவரி - மார்ச்காய்க்கிற  பாசி நிற மாவடுக்களைப் பொறுக்கிப் பறிச்சு அத விளக்கெண்ணெய் தடவி அப்புறம் கடுகு, மிளகாய் வச்சு அம்மியில அரச்சக் கலவையை உப்போட மாவடுக்களோட சேத்து குலுக்கி பீங்கான் ஜாடிகள்ல போட்டு வச்சுருப்பாங்க   மாவடு ஊறுன தண்ணியும் தொட்டுக்க நல்லாயிருக்கும்.


வடுமாங்காப் பத்தி காளமேகப் புலவர்கூடப் பாடியிருக்காரு..


திங்கள் நுதலார் திரு மனம் போலே கீறிப்
பொங்கும் கடல் உப்பைப் புகட்டியே எங்களிடம்
ஆச்சாளுக்கு ஊறுகாயா ஆகாமல் ஆருக்காக்
காய்ச்சாய் வடுமாங்காய்?


இப்பெல்லாம் தேவைப் படும்போது கடையில கிடைக்குற வடுமாங்காய் வாங்கி  யூஸ்
பண்றோம்..ஆனா அந்த பழைய ஸ்மெல், ருசி கைப்பக்குவம்   இப்ப கிடைக்குறதுல இல்ல!

மாசி மாசம் மாவடு
வைகாசி மாசம் மாம்பழம் ன்னு 
சொல்வாங்க..நேத்தியிலேயிருந்து வைகாசி பொறந்தாச்சு..எனவே சூட்டோடு சூடா..

மாம்பழங்களைப் பத்தி மலரும் நினைவுகள்  நாளைக்கு..!


சினிமாப்  பாட்டில்  சிரிப்பு  
பாட்டு  - " அட  என்னாத்த சொல்வேனுங்கோ.. வடு மாங்கா ஊறுதுங்கோ..."
சொல்லவே வேணாம்.. அதான் நாத்தம் குடலைப் புரட்டுதே..!




3 comments:

  1. ஆகா சூப்பர்!!!! ஜொள்ளிக்கிட்டெ BLOG படிச்சு முடிச்சுட்டேன்.

    ReplyDelete
  2. jollu...jollu... :P :P
    I'm so opposite to your parambarai... all i need is தயிர் சாதம் with ஊறுகாய் esp மாவடு or ஆவக்காய்...
    just ate மாம்பழம் but missing India மாம்பழம் varieties soooo much!!

    ReplyDelete
  3. ரொம்ப நாளைக்கு முன்ன, குமுதத்தில, பல மாமிகள் மாங்கா ஊறுகாய் போடறது பற்றி ஒரு கதை வந்துது, JP-க்கு ஞாபகம் இருக்கா ? ;)

    ReplyDelete