Tuesday 1 May 2012

குறிஞ்சித்திணை


KODAIKANAL  SPECIAL  
குறிஞ்சித்திணை

குறிஞ்சி நிலத்தில் ( மலையும் மலை சார்ந்த இடமான கொடைக்கானலில் )  இரண்டு நாட்கள் குதூகலமாகக் கழிந்ததின் விளைவாக குறிஞ்சித்திணையில் வரும் பேமஸ் பாடல் உங்களுக்காக - 

"முன்பே வா என் அன்பே வாஎன்ற ஹிட்  பாடல்ல 
" நீரும் செங்குளச் சேறும்
கலந்தது போல " அப்டீன்னு ஒரு வரி வரும்.
இந்த அருமையான உவமையின் மூலத்தைத்தான் இன்னிய post சொல்லப்போறேன்  

    யாயும் ஞாயும் யாரா கியரோ
    எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
    
யானும் நீயும் எவ்வழி அறிதும்
    
செம்புலப் பெயல்நீர் போல
    
அன்புடை நெஞ்சம் தாம்கலந் தனவே

இந்த பாட்டுல வர்ற தமிழ் வார்த்தைகளுக்கு அர்த்தம்
யாய் = என்தாய்
ஞாய் = உன்தாய் 
எந்தை = என்தந்தை
நுந்தை = உன் தந்தை
கேளிர் = உறவினர்
செம்புலம் = செம்மண் நிலம் 
பெயல்நீர்= மழைநீர்


அர்த்தம் புரிஞ்சிச்சா...


இல்லேன்னா ஜலீல் பிப்ரனின் விளக்கவுரை கீழே


தன்னோட டாவு கிட்ட நம்ம ஹீரோ சொல்ற டயலாக் -


என்னோட ஆத்தாவுக்கும் ஒன்னோட ஆத்தாவுக்கும் ஒரு ரிலேசனும் இல்ல..
என்னோட நைனாவுக்கும் ஒன்னோட நைனாவுக்கும் ஒரு சொந்தமும் இல்ல...நம்மளும் இதுக்கு முன்னாடி மீட் பண்ணதே இல்ல..
நம்ம ஹார்ட் ரெண்டும் மழத்தண்ணியும் சேப்புமண்ணும்
கலந்தா மாதிரி குஜால்சா ஆயிடுச்சி..!


இந்த பாட்டுல வர்ற செம்புலப்பெயல் நீர் போல என்ற உவமைதான் இந்த பாட்டுக்கே ஹைலைட்
 பலபேர் இத பலவிதமா சொல்லியிருக்காங்க..
செம்மண் நிலம் கீழே இருக்கு...வானம் ரொம்ப உயரத்துல இருக்கு  ரெண்டுத்துக்கும் உள்ள தூரம் ரொம்ப, ரொம்ப
அதிகம்வானம் மழை பெய்யுது.. பூமி நனைஞ்சு தண்ணியை இழுத்துக்குது. இப்ப மழை நீருக்கும், மண்ணுக்கும் ஒரு பிணைப்பு ஏற்பட்டு ஒன்றோடு ஒன்று  கலந்துவிடுகின்றது..செம்மண்ணின் நிறம் நீருக்கு வந்துவிடுகின்றது..
நீரை இழுத்துக் கொண்ட நிலம் சேறாகி விடுகின்றது..அதாவது நீரின் தன்மை
நிலத்துக்கு வருகின்றது..இனி இந்த இரண்டையும் பிரிக்க முடியாது..
அதுபோல இந்த காதலையும். நம்மையும்  யாராலும் பிரிக்க முடியாது
என்று தலைவன் தலைவிக்கு நம்பிக்கை ஊட்டுகின்றான்.

என்ன,  கொடைக்கானல் ஸ்பெசல் நல்லா இருந்துச்சா?

7 comments:

  1. kodaikanal special.... sooooooper!!! அப்டியே நம்ம தலைவன் தலைவி கொடைக்கானல் ல உல்லாசமா உலாவி வரும் fotos போட்டிருக்கலாமே...

    thank you sooo much for Jhalil Pibran's 'special' translation....இல்லன்னா ஒண்ணுமே புரிஞ்சிருக்காது

    what is குறிஞ்சித்திணை??

    ReplyDelete
    Replies
    1. திணை என்றால் பிரிவு என்று பொருள்.
      நிலத்தை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்தாகப்
      பிரித்து வைத்தார்கள், குறிஞ்சியைப் பற்றி வரும் எல்லா விசயங்களும்
      குறிஞ்சித் திணை என்று சொல்லப்படும்.

      Delete
    2. ஆஹா எப்போயோ படித்த தமிழ் grammar ஞாபகம் வருது :))

      Delete
  2. JP, எங்கேயோ போயிட்டீங்க!!! அட்டகாசமான explanation :))

    My first trip to Kodai was actually with JP! I remember many details from that summer trip :))

    ReplyDelete
    Replies
    1. உனக்கு ஒன்பது வயசிருக்கலாம். பெரியகுளம் சென்றிருந்தபோது
      அங்கிருந்து ஒருநாள் ட்ரிப்பாக கோடை சென்று வந்தோம்.
      அப்போது கேமரா வசதி இல்லாததால் நினைவுகள் மாத்திரம்
      தங்கியிருக்கின்றன.

      Delete
    2. JP, we also went to a "waterfalls" nearby...I am forgetting that name :)

      Delete