Friday 11 May 2012

சிரிப்பு ஞானம் - 4


சிரிப்பு ஞானத்தை எல்லோரும் விரும்புவதால் அடிக்கடி இந்த தலைப்புல post நெறையா வரலாம்!
ஆயிரம் தத்துவங்களை விட ஒரு சிரிப்பு உயர்ந்ததுன்னு சொல்லுவாங்க..!

வாய் விட்டு சிரித்தா நோய் விட்டுப் போகும், கவலைகள் மறந்துடும் என்பதற்காக
பல ஊர்ல சிரிப்பு க்ளப் ( ஹ்யூமர்  கிளப் ) ஆரம்பிச்சிருக்காங்க..
சிரிப்பு யோகான்னும் சில பயிற்சிகள் தராங்க..
இந்த பகுதியில வர்ற ஜோக்ஸ் எல்லாம் நான் படிச்சது, கேட்டது. 

தொகுத்து தருவதுதான் நான் செய்றது.. 

JOKES CAN NEITHER BE CREATED NOR DESTROYED.
It takes different forms



 சினிமா பாடல்களில் சிரிப்பு

பாட்டு  - அதாண்டா இதாண்டா அருணாசலம் நாந்தாண்டா.. 
சார்! கொஞ்சம் மரியாதைக் கொடுத்துப் பாடுங்க..!

பாட்டு - காதல் கடிதம் தீட்டவே மேகம் எல்லாம் காகிதம்
லூசு......கொஞ்சம் கூட அறிவே இல்ல.....மேகத்துல எப்படிடா எழுதுவ..
தலைகீழா எப்படிடா உக்காருவே..?

பாட்டு - அவள் பறந்து போனாளே...
பின்னே.....வந்தவன் அமெரிக்கா மாப்பிள்ளை ஆச்சே..!

பாட்டு - இரவா, பகலா, நிலவா..
கொஞ்சம் கண்ணாடிப் போட்டு பாருங்க..!

பாட்டு - ராக தீபம் ஏற்றும் நேரம் புயல் மழையோ..
நம்ம வானிலை அறிக்கையை நம்பினாலே இப்படித்தான்

பாட்டு - நான் பாடும் மௌன ராகம் கேக்கவில்லையா..
மௌன ராகம் எப்படிடா கேக்கும்..லூசுப்பயலே  

பாட்டு - மழை வருது மழை வருது குடை கொண்டு வா
யோவ் யாருய்யா ..அது வானிலை அறிவிப்பாளர ஹீரோவா போட்டது??  
பாட்டு - ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு
அடேங்கப்பா அவ்வளவு பெரிய கோப்பையா
பாட்டு - வானத்த பாத்தேன் பூமிய பாத்தேன்--
முதல்ல ரோட்டை பார்த்து போடா... டேய்.....போய் சேந்துர போற!!!

பாட்டு - உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா...
உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா  செருப்படி படலாமா  சம்மதம் தானா?

பாட்டு - உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா..?
கேஸ் தீந்துபோன சிலிண்டர்!


பாட்டு - ஒரேமுறைதான் உன்னோடு பேசிப் பார்த்தேன்..
சகிக்கல...உன் குரல்!



SEVEN  DAYS
WITHOUT
LAUGHTER
MAKES
ONE WEAK!

3 comments:

  1. SUpero super! My mom & I laughed like anything ! :):)

    ReplyDelete
  2. He he he :))
    பாட்டு - உங்க பொன்னான கைகள் புண்ணாகலாமா உதவிக்கு வரலாமா...
    உன் கருப்பான கண்ணம் சிவப்பாகலாமா செருப்படி படலாமா சம்மதம் தானா?
    >>> one of my fav songs :)

    பாட்டு - உன் சமையலறையில் நான் உப்பா, சர்க்கரையா..?
    கேஸ் தீந்துபோன சிலிண்டர்!
    >>> Yet another of my recent favs

    ReplyDelete
  3. "ஆயிரம் தத்துவங்களை விட ஒரு சிரிப்பு உயர்ந்ததுன்னு சொல்லுவாங்க"...totally agree with this. One hearty laff a day is all that is needed to keep life going..

    Seven days without lafffs???? No way can i survive even one day!!!

    ReplyDelete