Monday 7 May 2012

மூளைக்கு வேலை

விவசாயி ஒருவர் அறுவடை காலம் முடிந்து நெல் தானியங்களை மூட்டை கட்டிய பிறகு
நிலம் முழுக்க வைக்கோல் சிதறிக் கிடந்தது.  அதைக் கட்டுகளாக கட்டி நான்கு திசைகளிலும்
அடுக்கி வைத்தார். வடக்குப் பக்கம் ஒன்பது கட்டுகள் வைத்தார்.கிழக்கு பக்கத்தில் மேற்கு பக்கத்தில் வைத்ததைக்
காட்டிலும் நான்கு மடங்கு வைத்தார். தெற்கு பக்கத்தில் வடக்கு திசையில் இருப்பதை விட மூன்று மடங்கு வைத்தார்.
மேற்கு பக்கமும் வடக்கு பக்கமும் ஒரே அளவு கட்டுகள் இருந்தன.
அடுத்த நாள் லாரி ஒன்றை வரவழைத்து அனைத்து வைக்கோல் கட்டுகளையும் திரட்டி ஒன்றாகக் கட்டி அனுப்ப திட்டமிட்டிருந்தார்.

ஆனால் இரவு அடித்த புயல்  காற்றில் வடக்கு மற்றும் கிழக்கு பக்கத்திலிருந்த கட்டுகள் வீணாகிவிட்டன. பாக்கி
 வைக்கோலை மட்டும் அடுத்த நாள் லாரியில் அனுப்பினார். லாரியில் மொத்தம் எத்தனைக் கட்டு வைக்கோல் இருந்தன?










ஒன்றுதான்! ஒன்றாகக் கட்டித்தான் அனுப்ப திட்டமிட்டிருந்ததாக முதல் பாரா கடைசி வரியில் சொல்லியிருக்கிறோமே! 

1 comment: