Thursday 17 May 2012

சித்தர்கள் - பிரம்மமுனி & கோரக்கர்

Patanjali

சித்தர்கள் வரிசையில அடுத்ததாக இரட்டையராக  காட்சி அளித்த  பிரம்மமுனி, கோரக்கர் பற்றிய ஒரு சுவாரஸ்யமான கதை சொல்லப் போறேன்.
கோரக்கரைப் பத்தி நெறைய கதைகள் உண்டுஅதெல்லாம் அப்புறம்...

சிறு வயதிலிருந்தே  ரெண்டு பேரும் ஒண்ணா வளந்தாங்க..ஒண்ணா படிச்சாங்க..ஒண்ணா தீட்சைப் பெற்று ஒண்ணா தவம் செய்து  சித்துக்கள் எல்லாம் பெற்றாங்க.

பிரம்மமுனி ஒருநா கோரக்கர்கிட்ட " உலகத்துல நல்லவங்க கொறஞ்சுட்டாங்க..நாம நம்ம தவ வலிமையால படைப்புத் தொழில் முதற்கொண்டு தெய்வத்தோட வேலைகளை  நாமே செய்வோம்நல்லவங்களை உருவாக்குவோம் " அப்டீன்னாருகோரக்கரும் " நான்  நினைச்சேன்நீங்க சொல்லிட்டீங்கஇதுக்கு ஒரு யாகம் பண்ணனும் " ன்னு   ஒரு நல்ல நாள் பாத்தாரு. யாகத்தை ரொம்ப சிறப்பா பண்ண ஆரம்பிச்சாங்க. தெய்வங்களோட வேலைகளை
இவங்க பண்ண ஆரம்பிச்சா பிரச்சனைகள் வரும்தானே! யாகத் தீயிலிருந்து அழகான ரெண்டு பெண்கள் தோன்றுனாங்கஆனா இந்த ரெண்டு பேரும் அவங்க அழகுல மயங்குலகோபத்துல " எதுக்கு எங்கள் வேலையை கெடுக்க வந்தீங்க? " ன்னு கத்துனாங்க. அப்ப அங்க வந்த வாயுவும், அக்னியும் இந்த பொண்ணுங்க அழகுல மயங்கி வழிய ஆரம்பிச்சாங்க. இதப் பாத்த சித்தர்களுக்கு ஒரே வெறுப்பு. நல்ல மனிதர்களை உருவாக்க நெனைச்சா தேவர்களே இப்படி இருக்காங்களேன்னு வருத்தப் பட்டாங்க. அவங்க யாகம் நின்னுப் போச்சு. கமண்டலத்துல இருந்த தண்ணிய எடுத்து அந்த பொண்ணுங்க மேல தெளிச்சு ரெண்டு பேரையும் செடிகளா ஆக்கிட்டாங்கபிரம்மமுனியால ஆக்கப்பட்ட செடிக்கு " பிரம்மபத்திரம்"ன்னு பேரு. கோரக்கரால சாபத்துக்குள்ளான பொண்ணு " கோரக்கர் மூலிகை" ங்கிற செடியா மாறிப்போனா. இதெல்லாம் பாத்துக்கிட்டுருந்த அக்னிக்கும், வாயுவுக்கும் ரொம்பவே வருத்தமாயிடுச்சு..


அக்னி நெருப்பா மாறி பிரம்மபத்திரச் செடியை அணைச்சுக்கிட்டான். வாயு தண்ணியா மாறி கோரக்கர் மூலிகையை சேந்துக்கிட்டான்.


கோபப் பட்டதாலேயும், சாபம் கொடுத்ததாலேயும் சித்தர்களோட தவசக்தி அழிஞ்சுப் போச்சு
இருந்தாலும் சிவபெருமான் இவங்க முன்னாடி வந்து " தெய்வங்களோட வேலைகளை நீங்க எடுத்துக்கிட்டது தப்புஇருந்தாலும் உங்களோட நல்ல எண்ணத்துக்குப் பரிசாக நீங்க உருவாக்குன செடிகள் ரெண்டும் நல்ல மூலிகைகளாத் திகழும்" ன்னு வரம் கொடுத்தாரு.


பிரம்மபத்திரம் ங்கிற மூலிகைக்கு இன்னொரு பேரு புகையிலை                             ( அக்னியோட சேந்ததால சக்தி கூட)
கோரக்கர் மூலிகைக்கு இன்னொரு பேரு கஞ்சா ( தண்ணியோட சேந்ததால சக்தி அதிகம் )
இவைகள் உயிர் காக்கும் மூலிகைகள்தான்...
ஆனால் இவை இன்று புகைபோதைக்குத்தான்  அதிகம் பயன்படுகின்றன.
கோரக்கர்பிரம்மமுனி எழுதுன மருத்துவ நூல்கள் எக்கச்சக்கமா இருக்கு


கலியுகம் துவங்கிய நாள் முதல், இறுதி நாள் வரையிலான விவரங்களை கோரக்கர் தனது ”சந்திரரேகை” நூலில் விவரித்திருக்கிறார். கலியுலத்தின் அரசியல், சமூகம், வாழும் மனிதர்களின் குண நலன்கள் பற்றிய தகவல்களும் இந்த நூலில் காணக் கிடைக்கின்றன.



கலியுகம் மொத்தம் 4,32,000  வருசங்கள்!  கலியுகம் ஆரம்பிச்சு 5105  வருசம்தான் ஆயிருக்கு... 

நாஸ்ட்ரடாமஸ் கணிப்புகள் எல்லாம் கோரக்கர் முன்னாடி ஒண்ணுமே இல்ல.!

5 comments:

  1. WOW, now I know the Rishi moolam and Nadhi moolam of Tobacco and Dope!!! Intersting JP!! Now I am going to google about sithars, you are keep tempting me to read about sithars with all the stories. JP, Keep it going!!!

    ReplyDelete
  2. Sundu, Now we know why US wants to legalize Dope, see after all it is medicine!!!!

    ReplyDelete
    Replies
    1. Sathi, "Medical Marijuana" is already legal in California :)) All you have to do is to fall sick in certain way ;)

      Delete
  3. JP, looking forward to Indian
    நாஸ்ட்ரடாமஸ்predictions post :))

    ReplyDelete