Monday 14 May 2012

பரீட்சை ஜுரம்




Net  connectivity  சரியில்லாததால             " அன்னையர்தின" post 
போடமுடியாமல் போய் விட்டது.. அடுத்த சந்தர்ப்பத்தில் யோசித்து வைத்திருந்ததைப் போடுகிறேன்..

வர்ற 21 ம் தேதியிலிருந்து எனக்கும்மாலாவுக்கும் MSc  பரிட்சைகள் ஆரம்பிக்குது..
பரிட்சை பயம் ஒண்ணும் கிடையாது...  ஆனா பரீட்சை ஜுரம் அடிக்க ஆரம்பிச்சுடுச்சி
மொத்தம் நாலு பேப்பர்..
நாங்க படிக்கறது பாரதிதாசன் பல்கலைக் கழக MSc  (Yoga for Human Excellence - யோகமும் மனித மாண்பும் )

எழுதப் போற நாலு பேப்பர் என்னன்னா

தற்கால யோகா முறைகளின் பயன்பாடுகள்
உடல் நலம்
உயிர்வளமும்  மன வளமும்
குணநலப்பேறு

ப்ராக்டிகல் எக்ஸாம் போனமாசம் முடிஞ்சுடிச்சு..அதுல உடற்பயிற்சி, யோகாசனம் போன்றவை செஞ்சு காட்டணும்..ப்ராக்டிகல் பாஸ் பண்ணியாச்சு,,தியரிதான் கஷ்டம்..என்னதான் இந்த நாலு சபஜெக்டுல
எங்களுக்கு எல்லாம் தெரிஞ்சாலும் புக்ல இருக்குறமாரி எழுதுனாதான் மார்க்பேப்பர் திருத்தப் போறது யுனிவர்சிடி காரங்க..!

மாலா படிக்க ஆரம்பிச்சுட்டா.." blog  எழுதுற நேரத்துல ரெண்டு சாப்டர் படிக்கிலாமுல்ல" ன்னு அப்பப்ப எனக்கு அட்வைஸ்!   நாளையிலிருந்து
 படிக்கலாமுன்னு உத்தேசம்..!


3 comments:

  1. All the Best for the Exams

    ReplyDelete
  2. good luck!!
    Mala பக்கத்துல உக்காந்துட்டு bit அடிச்சுடுங்க... :)

    ReplyDelete
  3. Uncle & Aunty,

    All the Best!

    ReplyDelete