Sunday 20 May 2012

கொங்கணச் சித்தர்


மனவளக்கலைப் பயிற்சி வகுப்புகளில் அடிக்கடி நான் சொல்லக் கூடியது
கொங்கணச் சித்தரின் கதை – 

கொங்கண தேசத்துல ( கேரளா) இருந்து  வந்தவர்ங்கிறதால இவரு பேரு கொங்கணர்ன்னு  ஆயிடுச்சி..சின்னவயசிலே அப்பா இல்லாததால அம்மாதான் கஷ்டப்பட்டு இவர வளத்தாங்க..இவருக்கு சித்து வேலைங்க செய்ய ஆசை வந்து பல முனிவர்களைப் போய் பாத்தாரு. எல்லாருமே " நீ முதல்ல தவம் பண்ணு " ன்னு சொல்லி அனுப்பிட்டாங்க..ஒருநா அம்மாவைத் தவிக்கவிட்டுட்டு காட்டுக்குப் போய் தவம் பண்ண ஆரம்பிச்சாரு. சாப்பிட உணவு தேவைன்னா பக்கத்தில இருக்குற ஊர்ல பிச்சை எடுத்து சாப்பிடுவாரு.

ஒரு நாள் ஒரு மரத்தடியில உக்காந்து தவம் பண்ணிக்கிட்டுருந்தப்ப மரத்து மேலே இருந்த கொக்கு ஒண்ணு இவரு மேல எச்சம் போயிடுச்சி.. இவரு கோபத்தோட கொக்கைப் பாத்தாரு.. இவரோட தவக்கனல்ல கொக்கு அப்படியே எரிஞ்சு சாம்பலாயிடுச்சி..தன்னோட தவ ஆற்றல கர்வத்தோட  நெனச்சுக்கிட்டே ஊருக்குள்ள வந்து ஒரு வீட்ல பிச்சைக் கேட்டாரு.


அந்த வீட்டுக்காரம்மா தன்னோட புருசனுக்கு சாப்பாடு பரிமாறிக்கிட்டு இருந்ததால கொஞ்சம் லேட்டா  கொங்கணருக்கு உணவு எடுத்துக்கிட்டு வந்தாங்க.. கொங்கணருக்கு ஒரே கோவம்..அந்த அம்மாவை மொறைச்சுப் பாத்தாரு..அந்த அம்மாவோ " என்னையும் கொக்கென்று நினைத்தீரோகொங்கண ரே " ன்னு கேட்டாங்கஇவருக்கு  தூக்கிவாரிப் போட்டுச்சு - " எப்படி இந்த அம்மாவுக்கு என் பேரும், நான் கொக்கை எரிச்சதும் தெரிஞ்சுச்சி!" ன்னு அதிர்ச்சியோட அந்த அம்மாவைப் பாத்தாரு. அப்ப அந்த அம்மா சொன்னாங்க - " என்னைப் போல பெண்கள் எல்லாம் இறைவனை அடைய பூஜை, புனஸ்காரம், தவம்,தியானம் பண்ணவேண்டாம், கணவருக்கு பணிவிடை செய்வதும், வீட்டு கடைமைகளை ஒழுங்காக நிறைவேற்றுவதும்தான் தவம் "
கொங்கணருக்கு பணிவு வந்து அந்த அம்மாகிட்ட " என் ஆணவம் அழிஞ்சுப் போச்சு..என் அறிவுக்கண்ணைத் தொறந்துட்டீங்க.. உபதேசம் பண்ணுங்க " ன்னு கேட்டாரு. அதுக்கு அந்த அம்மா " இந்த ஊர் கடைசியில தர்மவியாசன்னு ஒத்தரு இருக்காரு. அவருகிட்டப் போய் கேளுங்க" ன்னு அனுப்பி வச்சாங்க.

தர்மவியாசனைப் போய் பாத்த கொங்கணருக்கு மேலும் அதிர்ச்சி..ஒரு தபஸ்வி மாதிரி ஆளைப் பாக்கப் போனா இந்த ஆளு ஒரு கசாப்புக் கடையில உக்காந்துகிட்டு இறைச்சியை வெட்டிக்கிட்டுருக்காருஇவரப் பாத்தவுடனே     " நீங்கதான் கொக்கை எரிச்ச கொங்கண ரோ !  அந்த அம்மா அனுப்புனாங்களா? இப்படி அமைதியா உக்காருங்க.." ன்னு சொல்லிட்டு வியாபாரத்தைப் பாக்க ஆரம்பிச்சாரு தர்மவியாசன். அப்பப்ப பக்கத்துல இருக்குற வீட்டுக்குள்ள போயிட்டு வந்தாரு.

அதிர்ச்சியில் அமர்ந்திருந்த கொங்கணர் கிட்ட வந்து " வயசான என் அப்பா, அம்மா நோயால கஷ்டப்பட்டுக்கிட்டுருக்காங்க..அப்பப்ப அவங்க காலப் புடிச்சுவுட்டு தூங்க வைப்பேன். பெற்றவர்களுக்கு சேவை செய்வதே மிகப் பெரிய தவம். உங்களுக்குத் தெரியாததா?" ன்னு கேட்டாரு. ஊருல அம்மாவைத் தவிக்கவுட்டுட்டு வந்தது ஞாபகம் வந்துச்சு..பெற்றவர்களுக்கு சேவை செய்வதனால் இவனுக்கு முக்காலமும் உணரும் ஆற்றல் வந்தது என்பதை உணர்ந்தாரு. ஒவ்வொரு மனிதனும் அவனவன் கடமையை செய்வதே ஒப்பற்ற தவம்! இதைப் புரிஞ்சிக்க இவ்வளவு நாளாச்சேன்னு  தர்மவியாசனுக்கு நன்றி சொல்லிட்டு அம்மாவைக் காண ஊர்நோக்கி புறப்பட்டாரு..

கொங்கணர் மருத்துவ நூல்கள்ரசவாத நூல்கள்யோகா நூல்கள் இப்படி நெறையா எழுதிக் குவிச்சிருக்காரு..பெரிய செல்வந்தராஆயிரக்கணக்கான சிஷ்யர்களோட வாழ்ந்திருக்காரு

இவருடைய ஜீவசமாதி திருப்பதியில் இருப்பதால்தான் அங்கு செல்வம் கொட்டுகிறது என்பார்கள்.


இவரப் பத்தி இன்னும் நெறைய கதைங்க இருக்கு.. ஆனா 
மேல சொன்னதைத்தான் நான் அடிக்கடி சொல்லி
மக்களுக்கு கடமையுணர்வைப் போதிப்பேன்!


2 comments:

  1. nice story...
    with all your story telling, i'm transported back to my childhood days of listening to stories...

    ReplyDelete
  2. " என்னையும் கொக்கென்று நினைத்தீரோ. கொங்கணரே " I remember this line but forgot the story :))

    ReplyDelete