Wednesday 16 May 2012

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 5

மாம்பழம்
இப்ப  பாபா ப்ளாக் ஷீப் பாடுற மாதிரி அந்தகாலத்துல  எலிமெண்டரி ஸ்கூல்ல  
"நிலா நிலா ஓடி வா"
அப்புறம்
"மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம்" போன்ற ரைம்ஸ்களைக் குழந்தைங்க பாடுங்க..

ஸ்கூல்ல படிக்கும்போது " எங்கள் ஊர் " ங்கிற தலைப்புல கட்டுரை எழுதச் சொல்வாங்க..ஆயிரமானாலும் மாயூரமாகாது", காசியை விட பெருமை வாய்ந்ததுஇப்படியெல்லாம் எழுதினாலும் "  புகழ் பெற்ற பாதிரி மாம்பழம் இங்குதான் அதிகம் கிடைக்கின்றதுபாதிரியார் ஒருவரால் 
உருவாக்கப் பட்டதால் பாதிரி மாம்பழம் என்று அழைக்கப் படுகின்றது அவரால் உருவாக்கப்பட்ட  தாய் மரம் இன்றும்  இருக்கின்றது" என்றும் எழுத வேண்டும்.

ஸ்கூல் பசங்களோட ஊசி மாதா கோயில் தோட்டத்துல இந்த தாய் மரத்தைப் பாத்த ஞாபகம்அப்புறம் சர்ச்ல எல்லாருமா ப்ரேயர்ல கலந்துக்கிட்டதும் நினைவுல இருக்கு.

பாதிரி மாம்பழத்தோட ஸ்பெஷல் அதோட கலர், ஸ்வீட் மணமும், ருசியும்தான்! காய் ரொம்ப புளிக்கும். ஆனா பழுத்தா அதோட வாசனை ஊரைக் கூட்டும். இந்த பழத்துல மில்க் ஷேக் பண்ணி சாப்பிடணும்...இதுக்கு இணையா சொல்ல ஒண்ணுமே இல்ல.. தேவாமிர்தம்! பொதுவா பாதிரி பழத்துல வண்டே இருக்காது.. அதனால பழத்தை கட் பண்ணாம உள்ளுக்கு ஜூஸ் வர்ற மாதிரி கசக்கி பழத்தோட மூக்குக்கிட்ட ஒரு துளைப் போட்டு ஜூஸைக் குடிக்கிறது  சொர்க்கம்.. அப்புறம் அந்த துளை வழியே மாங்கொட்டையை லாகவமாக எடுத்துவிட்டு பலூன் மாதிரி ஊதி வச்சா பழயபடி முழு மாம்பழம் போல இருக்கும். இப்படி பலரை ஏமாத்தி விளையாடி இருக்கோம்.

அப்ப ஒரு பாதிரி பழம் வெறும் பத்து பைசேக்கு கிடைச்சுது.. இப்ப ஒரு பழம் இருபது ரூபாவுக்கு  விக்குது..
பாதிரி மாம்பழம்பலாப்பழம்  மலை வாழைப்பழம்  மூணும் சேந்து  செய்யப்படுற ஃப்ரூட் சாலட் படு டேஸ்டியா இருக்கும்.
இங்க திருச்சியில மாம்பழச் சாலையில முப்பது, நாப்பது வரைட்டீஸ் கிடைக்குது..ரொம்ப பேவரிட் இமாம் பசந்த்.. அதுவும் தாத்தாச்சாரியார் தோட்டத்து பழத்துக்கு கிராக்கி அதிகம். இதுவும் நல்ல இனிப்பா இருக்கும்.
அல்போன்சா, மல்கோவா, குண்டு, நீலம்,  கிளிமூக்கு, பங்கனப்பள்ளி, கிரேப்ருமானியாசெந்தூரம்  இப்படி நானூறுக்கும் மேல ரகங்கள் இருக்காம்.
என்னோட Top  5
1. பாதிரி
2. இமாம் பசந்த்
3. மல்கோவா
4. அல்போன்சா
5. பங்கனப்பள்ளி
மாம்பழ சீசன் ஆரம்பிச்சாச்சு.....Welcome to Trichy 
சினிமாப் பாட்டில் சிரிப்பு
பாட்டு - நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன்
அவள் மாம்பழம் வேணுமென்றாள்.

நல்ல வேளைடாஸ்மாக்ல
நீ   நிக்கலை!

2 comments:

  1. missing trichy days...
    missing மாம்பழம் and Masti மோர் dinner...

    ReplyDelete
  2. Don't remember when I last had a பாதிரி!!! I remember May is the time பாதிரி shows up. Have some on my behalf :))

    ReplyDelete