Friday 18 May 2012

சிரிப்பு ஞானம் - 5


சிரி..! உலகம் உன்னோடு சேர்ந்து சிரிக்கும்!
அழு.....நீ மட்டும்தான் அழுது கொண்டிருப்பாய்





சிரிப்பைப் பற்றி மருதகாசி எழுதி கலைவாணர் NSK பாடிய பாடலில் ஒரு பகுதி   


சிரிப்பு,
இதன் சிறப்பை சீர்தூக்கிப் பார்ப்பதே
நமது பொறுப்பு
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - மனம்
கருப்பா வெளுப்பா என்பதை எடுத்துக் காட்டும்
கண்ணாடி சிரிப்பு - இது
களையை நீக்கி கவலையைப் போக்கி
மூளைக்குத் தரும் சுறுசுறுப்பு

துன்ப வாழ்விலும் இன்பம் காணும்
விந்தை புரிவது சிரிப்பு - இதைத்
துணையாய்க் கொள்ளும் மக்கள் மனதில்
துலங்கிடும் தனி செழிப்பு

Some மாமியார் ஜோக்ஸ் 


என் மாமியார் தங்கமானவங்க!
இப்போ அவங்க எங்கே?
என் புருஷன் குழந்தையா இருக்கறப்பவே இறந்துட்டாங்க

உலகிலேயே மிகவும் அதிர்ஷ்டக்கார பெண்மணி யார்?
ஏவாள் சார்..!
எப்படி?
அவளுக்குத்தான்   மாமியாரே  கிடையாதே..! 





இராமாயண வகுப்பில் -

ராமன் காட்டுக்குப் போனப்ப சீதையும் உடன் சென்றாள். ஏன்?

தசரதனுக்கு பட்டத்து ராணிகள் மூணு பேரு. இது தவிர அறுபதாயிரம் மனைவிகள்.
ஒரு மாமியாரையே தாக்கு பிடிக்க முடியாது..
60003  பேரா...
காடுதான் பெட்டர்ன்னு  சீதை  முடிவு பண்ணிட்டா!

2 comments:

  1. totally agree with the cute baby in the last foto :)

    ReplyDelete
  2. More மாமியார் ஜோக்ஸ் :

    Man #1: எங்க மாமியார் கிணத்துலே விழுந்துட்டாங்க!
    Man #2: ஐயையோ, அப்புறம் என்ன ஆச்சு?
    Man #1: என்ன பண்றது இப்ப Tap Water தான் use பண்றோம்.

    ReplyDelete