Thursday, 10 May 2012

சிந்தனை ஞானம்


கன்பியூசியஸ் என்ற மேதைக்கு அரசன் முதல் ஆண்டி வரை எண்ணற்ற சீடர்கள்இவர் காலத்திலேயே லாவோட்சு என்ற ஞானியும் வாழ்ந்து வந்தார்ஒருநாள் கன்பியூசியஸ் தன சீடர்கள் சூழ லாவோட்சுவைப் பார்க்க வந்தார்.
லாவோட்சு ஒரு குகையில் அமைதியாக அமர்ந்திருந்தார்பக்கத்தில் ஒரு அகல் விளக்கு மாத்திரம் எரிந்துகொண்டிருந்தது.

சீடர்களை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற கன்பியூசியசை லாவோட்சு கண்டு கொள்ளவே இல்லைநாலைந்து முறை கனைத்துப் பார்த்தார்லாவோட்சுவிடமிருந்து ஒரு சலனமும் இல்லை.

நான் கன்பியூசஸ் வந்திருக்கின்றேன் " என்று சத்தமாகக் கத்தினார்.
அதனாலென்ன..நீங்கள் கனபியூசியசாகவே இருங்கள் " என்றார் லாவோட்சு.
அதிர்ச்சியடைந்த கன்பியூசியஸ் " நான் உங்களிடம் பேசவேண்டும் " என்றார்.
" தாராளமாகப் பேசலாமே..! ஆனால் உங்களுக்கு பதில் சொல்லத்தான் இங்கு யாருமில்லை! " என்றார். லாவோட்சு
கன்பியூசியஸ் ஆடிப் போய்விட்டார்.

அவர் எதிர்பார்த்தமாதிரி ஒன்றும் நடக்கவில்லை. தன்னை சுதாரித்துக் கொண்டு மெதுவாகச் சொன்னார் -
" நான் போய்விட்டு இன்னொரு சமயம் வருகிறேன்...."

வாய்விட்டு சிரித்த லாவோட்சு சொன்னார் -
" பொய் சொல்லாதீர்கள்! நீங்கள் இனிமேல் இங்கு வர விரும்பமாட்டீர்கள்!"

இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் அறிவதென்ன?
என்ன புரிந்தது


சிறந்த விளக்கம் தருபவருக்கு ஜலீல் பிப்ரன் ட்ரீட் தருவார்!






6 comments:

  1. This is tough...ok let me try :))

    >>> " நான் கன்பியூசஸ் வந்திருக்கின்றேன் " என்று சத்தமாகக் கத்தினார்.
    >>> " அதனாலென்ன..நீங்கள் கனபியூசியசாகவே இருங்கள் " என்றார்
    >>> லாவோட்சு.
    *** Here கன்பியூசஸ் has lot of ego. Sense of "I". Lao Tsu is pointing out that :) ***

    >>> " தாராளமாகப் பேசலாமே..! ஆனால் உங்களுக்கு பதில்
    >>> சொல்லத்தான் இங்கு யாருமில்லை! "
    *** Lao Tsu is indicating that everyone has the intelligence to know everything but it is all covered by ignorance. As long as the ignorance is removed, there is really nothing to discuss and ask questions ***:))

    >>> " பொய் சொல்லாதீர்கள்! நீங்கள் இனிமேல் இங்கு வர
    >>> விரும்பமாட்டீர்கள்!"
    *** Since கன்பியூசியஸ்'s ego is hurt, Lao Tsu expects him to not return ***

    :) :) :)

    ReplyDelete
  2. சீடர்களை வெளியே நிறுத்திவிட்டு உள்ளே சென்ற கன்பியூசியசை லாவோட்சு கண்டு கொள்ளவே இல்லை. நாலைந்து முறை கனைத்துப் பார்த்தார். லாவோட்சுவிடமிருந்து ஒரு சலனமும் இல்லை. -------

    Don't get distracted.


    நான் கன்பியூசஸ் வந்திருக்கின்றேன் " என்று சத்தமாகக் கத்தினார்.
    " அதனாலென்ன..நீங்கள் கனபியூசியசாகவே இருங்கள் " என்றார் லாவோட்சு.
    அதிர்ச்சியடைந்த கன்பியூசியஸ் " நான் உங்களிடம் பேசவேண்டும் " என்றார்.
    " தாராளமாகப் பேசலாமே..! ஆனால் உங்களுக்கு பதில் சொல்லத்தான் இங்கு யாருமில்லை! " என்றார். லாவோட்சு.
    கன்பியூசியஸ் ஆடிப் போய்விட்டார். ----- கன்பியூசஸ் is very proud of himself, not humble.....


    அவர் எதிர்பார்த்தமாதிரி ஒன்றும் நடக்கவில்லை. தன்னை சுதாரித்துக் கொண்டு மெதுவாகச் சொன்னார் -
    " நான் போய்விட்டு இன்னொரு சமயம் வருகிறேன்...." ---- Don't expect anything.....

    ReplyDelete
  3. கிட்டத்தட்ட வந்துட்டீங்க...
    ட்ரீட் கட்டாயம் உண்டு.....இந்தியாவுல....
    பன்னிரண்டு வகை சித்ரான்னங்களோட...!

    ReplyDelete
    Replies
    1. Who won? ப்ரியாவா, நானா ???
      I am assuming it is me :))
      Can't wait for the treat (:-P...
      What is the correct interpretation?

      Delete
    2. I don't want any சித்ரான்னம்.... lots n lots of மாம்பழம், இளநீர், and அதிரசம் will do :)

      Delete