Sunday 27 May 2012

சிரிப்பு ஞானம் - 6


சிரிப்பு ஒரு எளிமையான தியானம்.


 அதனால் உடனடியாக உடலுக்கு ஓய்வுகிடைக்கின்றது. நன்றாகச் சிரிக்கும் போது மனச்சோர்வு ஓடி விடுகின்றது. சிரிக்கின்ற போது சக்தி கூடுகின்றது. கோபப்படும்போது சக்தி விரயமாகின்றது. சிரிக்கின்ற போது குழந்தையாகி விடுகின்றோம். இயல்பாய் வளரும் செடியில் பூ பூத்ததும் அழகாகி விடுகின்றது. அது போல் முகத்தில் புன்னகைப் பூக்கள் பூக்கின்ற போது அழகு கூடுகின்றது.


சிரிப்பு முகத் தசைகளுக்கு மிகச் சிறந்த பயிற்சியளிக்கிறது. சிரிக்கும் போது கூடுதல் இரத்த ஓட்டத்தால் முகம் சிவக்கிறது. கண்கள் ஈர மாகின்றன. கண்களில் ஒளி நிரம்பிப் பிரகாசிக்கச் செய்கின்றன. முகத்தில் காந்த சக்தி வெளிப்படுகின்றது. அது அலை அலையாகப் பரவி எதி ரிலே இருக்கின்றவர்களையும் ஈர்க்கின்ற சக்தியை உள்ளுக்குத் தருகின்றது.
மற்றவர்களை உங்களால் ஈர்க்க முடியும் போது வெற்றி பெறுவது என்பது கடினமா? ஆம், வாழ்வில் வெற்றி பெறுவதற்கு நல்ல நகைச்சுவை உணர்வும் அவசியம் தேவை. மற்றவர்களுடன் கலந்து செயல்படவும், கூச்சமின்றி வெளிப்படையாகப் பழ கவும் தன்னம்பிக்கையையும் தலைமைப் பண்புகளையும் மேம்படுத்துவதற்கும் சிரிப்பு மேலும் துணை செய்கின்றது.
வாழ்க்கை முரண்களால் ஆனது. இரவு பகல் நன்மை தீமை, வெற்றி தோல்வி இப்படி ஒவ்வொன்றிற்கும் ஒரு மறுபக்கம் இருப்பது போல துன்பத்திற்கும் ஒரு மறுபக்கம் இருக்கின்றது. அதுதான் இன்பம்.
துன்பத்தை சிரிப்பினால்தான் வெல்ல முடியும். அதனால்தான் வாழ் வாங்கு வாழ்வதற்கு வழி சொல்லும் வள்ளுவப்பெருந்தகை, துன்பம் வரும் போது சிரி என்கிறார். அதாவது, ‘இடுக் கண் வருங்கால் நகுகஎன்கிறார்.
துன்பத்தில் சிரிப்பவனைக் கண்டால், ‘ஆழ வைக்கலாம் என்று வந்தோம், இவனோ சிரிக்கிறான். இவனை நாம் ஒன்றும் செய்ய முடியாது என்று நினைத்துத் துன்பம் தூரப் போய்விடும்என்கிறார்.


உருதுக் கவிஞர்அதம்இதையே இப்படிக் கூறுகிறார்...


சோகத்தில் ஏன்
சிரிக்கிறாய் என்கிறாயா?
இருள் சூழும்  போதுதானே
விளக்கேற்ற வேண்டும்!


அடடா... எவ்வளவு அற்புதமான கவிதை! இருள் துன்பம் போன்றது. அந்த இருளை விரட்ட விளக்கு ஏற்றுகின்றோம். அது போல துன்பத்தைப் போக்க புன்னகை தீபத்தை இதயத்தில் ஏற்ற வேண்டும் என்கிறார்.
மகிழ்ச்சியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். ஆனால் அது இங் கேதான் இருக்கிறது. உங்களைச் சுற்றியே... உங்களுக்குள்... உங்கள் இதயத்தில்தான் இருக்கிறதுஎன்பார் பார்க்ஸ் அரலியஸ்.
நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லாவிட்டால் நான் எப்போதோ தற்கொலை செய்து இருப்பேன்என்றார் மகாத்மா காந்தியடிகள்.
 ஆம்,
 வாழ்வதற்கான ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருவது நகைச்சுவை.
















 சினிமா பாடல்களில் சிரிப்பு

( on popular demand )



பாட்டு - பாட்டுக்கு பாட்டேடுத்து நான் பாடுவதைக் கேட்டாயோ?

கேட்டதனால்தான் தாயி... இப்படி நொந்து நூடுல்சாகிக் கெடக்குறேன்!


பாட்டு - வெண்ணிலா வானில் வரும் வேளையில் நான் விழித்திருந்தேன்!
வேற வழி..பவர்கட் இப்படியே தொடர்ந்தா விழிச்சுக்கிட்டு நிலா வெளிச்சத்திலதான் படிச்சாகணும்!
பாட்டு - ABC  நீ வாசி... எல்லாமே ஸோ ஈஸி..!
ABC  மூணு எழுத்து ஈஸிதான்...மத்த எழுத்து எல்லாம் யாரு படிக்கறது..?
பாட்டு -  உன் பேரைச் சொல்ல ஆசைதான்...
பேரா  அது? வாயில நுழைஞ்சாத்தானே சொல்றதுக்கு?
பாட்டு - நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
ஏன் நீ பேச மாட்டியா? நீ என்ன ஊமையா?
பாட்டு - காற்று வாங்கப் போனேன்,,, ஒரு கவிதை வாங்கி வந்தேன்...!
சரியான லூசுடா நீ! வாங்க வேண்டியதை உட்டுட்டு எதுக்கு வேற எதையாவது வாங்கணும்?


As I'm going to Gujarat today, this will be the last post for this month. See you next month!   -  Jp

No comments:

Post a Comment