Monday, 26 September 2022

எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நினைவுகள் - 32

 அருவிக் குளியல் 

குரங்கு அருவி - தற்போது கவியருவி 


மூன்று  ஆண்டுகள் கழித்து குரங்கருவியில் குளிக்கும் வாய்ப்பு கிடைத்தது.






செப்டம்பர் 23 ம்  தேதி காலையில்  மணிக்கு அருவிக்குச் சென்றபோது நாங்கள் ஐந்து பேர்கள் மட்டும்தான். வேறு யாரும் இல்லை. தண்ணீர் அருவியில் அளவாகக் கொட்டிக்கொண்டிருந்தது.  நிமிடங்கள் ஆனந்தமாகக் குளியல் போட்டோம்.

ஒரு பகுதியில் மிக வேகமாக நீர் காட்டிக்கொண்டிருந்தது. அங்கு தலை, முதுகைக் காட்டியபோது சுளீரென சாட்டையில் அடி வாங்கிய உணர்வு. சிலநிமிடங்களில் அங்கிருந்து விலகி நடு பகுதில் மிதமான வேகத்தில் கொட்டிய நீரில் அதிக நேரம் குளித்தேன். உடம்பெல்லாம் யாரோ பிடித்து விட்ட உணர்வு. பிறகு அருவியில் ஆரம்பப் பகுதியில் உட்கார்ந்து பத்து நிமிடங்கள்.


சுற்றுலாப் பயணிகள் சிலர் வரவே நாங்கள் உடை மாற்றி அங்கிருந்து கிளம்பினோம்.

முதன்முதல் அருவியில் குளித்தது 50 ஆண்டுகளுக்கு முன்.

பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவி - பத்தடி உயரத்திலிருந்து வீழும் நீரில் குளித்த அனுபவம் - தலைமுடியெல்லாம் பஞ்சாக உலர்ந்துபோனது இன்னும் ஞாபகம் உள்ளது. நடிகர் S S ராஜேந்திரன் எங்களுடன் குளித்தது, நாங்கள் கொண்டு சென்ற எண்ணையில் அவர் மசாஜ் செய்து குளித்தது இதெல்லாம் மறக்க முடியாத அனுபவம்.

பிறகு குற்றால அருவியில் குளிக்க சென்றபோது அதிகக் கூட்டம். எனவே இரவு ஒரு மணிக்கு குளிக்கச் சென்றோம். ஒரு மணிநேரம் குளித்த பிறகு ஏற்பட்ட அகோர பசி தீர டஜன் கணக்கில் இட்லி சாப்பிட்டது மலரும் நினைவுகளாக வந்து போயின.

கர்நாடகாவில் உள்ள ஜோக் அருவிகளின் அடிவாரத்திற்கு இறங்கி அங்கு ஓடிவரும் நீரில் குளித்தது, அங்கு கிடைத்த அன்னாசி பழங்களை உண்டு மகிழ்ந்தது மகிழ்ச்சியான அனுபவங்கள்.

நாகர்கோயில் அருகில் உள்ள திற்பரப்பு  அருவியில் குளிக்க ஆசைப்பட்டும் மாற்று உடைகள் எடுத்து செல்லாததால் அந்த அருவியில் குளிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.

குரங்கருவியில் பலமுறை குளிக்க வாய்ப்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஒரு சிலமுறை அதிக நீர்வரத்து காரணமாக தடை விதிக்கப்பட்டு குளிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பியதும் நினைவுக்கு வருகின்றது.

No comments:

Post a Comment