Saturday 10 September 2022

சிரிப்பு



சிரிப்பு சம்பந்தமான தத்துவ சிந்தனைகள்:-

சிரிப்பு என்பது மனிதனுக்குரிய சிறப்பம்சங்களில் ,மனித உணர்வின் விஷேடமானதொரு வெளிப்பாடாகும் இச் சிரிப்பானது மூன்று மாத குழந்தைப்பருவத்திலே இருந்தே ஆரம்பிக்கிறது (குழந்தையின் மழலை சிரிப்பில் மகிழாதவர்களுண்டோ?)

சிரிப்பானது பல்வேறு சந்தர்ப்பங்களில் இயல்பாகவே அல்லது செயற்கையாகவே வெளிப்படக்கூடியதாகும்.

வைத்தியதுறையினரின் ஆராய்ச்சியால் உடலில் 300 வகையான தசைகள் சிரிக்கும்போது அசைகின்றன என்பதனையும் மனமும் தேகாமும் சிரிக்கும் சந்தர்ப்பங்களில் புத்துணர்ச்சியும் , ஆரோக்கியமும் பெறுகின்ற என்பதனையும் கண்டறிந்துள்ளனர்.

ஆய்வென்றின் படி ஓரு நாளைக்கு சராசரி மனிதன் 15 தடவைகளும் குழந்தைகள் கிட்டத்தட்ட 400 தடவைகளும் சிரிக்கின்றன.இதிலிருந்து மனிதனுடை வயதிற்கேற்றவாறு சிரிப்பு குறைந்துகொண்டுபோவதை அவதானிக்கமுடிகிறது.

சில மேற்குலக நாடுகளில் சிரிப்பதை ஒரு பயிற்சியாக மேற்கொள்கின்றனர்


சிரிப்பின் வகைகள்

அசட்டு சிரிப்பு
ஆணவ சிரிப்பு
ஏளனச் சிரிப்பு
சாககச் சிரிப்பு
நையாண்டி சிரிப்பு
புன் சிரிப்பு
மழலை சிரிப்பு
நகைச்சுவை சிரிப்பு
அச்சிதல் சிரிப்பு








சிரிப்பை தெரிவிக்கும் விதங்கள்

உதட்டின் மூலமாக
பற்கள் தெரியும்படியாக
பற்கள்,நாக்கு என்பன தெரியும்படியாக சத்தமான சிரிப்பு








சிரிப்பினால் வெளிப்படுத்தும் தகவல்கள்

அன்பு
மகிழ்ச்சி
அகம்பாவம்
செருக்கு
இறுமாப்பு
தற்பெருமை
அவமதிப்பு
புறக்கனிப்பு
வெறுப்பு

சிரிப்பின் தன்மையும் மனிதர்களின் பண்பும்

வெற்றியில் சிரிப்பவன் வீரன்.

கண்பார்த்து சிரிப்பவன் கஞ்சன்.

துன்பத்தில் சிரிப்பவன் மனிதன்.

மகிமையில் சிரிப்பவன் மன்னன்.

விளையாமல் சிரிப்பவன் வீணன்.

இடம் பார்த்து சிரிப்பவன் எத்தன்.

மாண்பில் சிரிப்பவன் பண்பாளன்.

மோகத்தில் சிரிப்பவன் வெறியன்.

கற்பனையில் சிரிப்பவன் கவிஞன்.

ஓடவிட்டு சிரிப்பவன் நயவஞ்சகன்.

தெரியாதென்று சிரிப்பவன் நடிகன்.

நின்று சிரிப்பவன் நினைவுள்ளவன்.

ஓயாமல் சிரிப்பவன் பைத்தியக்காரன்.

கோபத்தில் சிரிப்பவன் சிந்தனையாளன்.

கொடுக்கும்பொழுது சிரிப்பவன் சூழ்ச்சியாளன்.

இன்பத்தில் சிரிப்பவன் ஏமாளி.

நினைவோடு சிரிப்பவன் அறிவாளி.

தெரியுமென்று சிரிப்பவன் பசப்பாளி.

இருக்குமிடமெல்லாம் சிரிப்பவன் கோமாளி..

குழைந்து சிரிப்பவன் சந்தர்ப்பவாதி.

நிலைகண்டு சிரிப்பவன் காரியவாதி.

அருளுக்கு சிரிப்பவன் ஆண்டி.

தற்பெருமையில் சிரிப்பவன் கோழை.

நிலை மறந்து சிரிப்பவள் காதலி.

காதலால் சிரிப்பவள் மனைவி.

அன்பால் சிரிப்பவள் அன்னை.

No comments:

Post a Comment