நாத்திக மனப்பான்மை கொண்ட செல்வந்தர் ஒருவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைச் சந்தித்தார். ``சுவாமி! நீங்கள் கடவுளுக்காக உங்கள் வாழ்க்கையையே துறந்து விட்டதாகக் கேள்விப் பட்டேன். அப்படியா?’’ எனக் கேட்டார்.உடனே ஒரு புன்னகையை உதிர்த்த பரமஹம்சர், ``நான் ஒரு சாதாரணத் துறவி. என்னைவிடவும் நீங்கள்தான் பெரிய துறவி’’ என்றார். செல்வந்தருக்குத் தூக்கிவாரிப் போட்டது ``என்ன சொல்கிறீர்கள்?’’ என்று திகைப்புடன் கேட்டார்.
பரமஹம்சர் பதில் சொன்னார்: ``ஐயா! நான் கடவுளுக்காக என் வாழ்க்கையைத் துறந்தேன். ஆனால் நீங்களோ, சுகபோக வாழ்வுக்காகக் கடவுளையே துறந்துவிட்டீர்களே. ஆகவே, என்னை விட நீங்கள்தான் பெரிய துறவி!’’
இதைக் கேட்டதும் செல்வந்தர் வெட்கித் தலைகுனிந்தார்.
No comments:
Post a Comment