Thursday, 5 January 2023

நண்பன்



1.எந்த ஒரு காயத்துக்கும் நண்பன் மருந்தாவான்.

2.உன் நண்பனுக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடு. ஆனால் ஒரு போதும் நண்பனை மட்டும் விட்டுக் கொடுத்து விடாதே!

3.வாழ வைப்பவன் இறைவன், வாழத் தெரிந்தவன் மனிதன், விழ வைப்பவன் துரோகி, தூக்கி விடுபவன் நண்பன்.

4.உரிமை கொண்டாடும் உறவை விட உறவைக் கொண்டாடும் நட்பே சிறந்தது.

5.ஒவ்வொரு நண்பர்களும் புதிய உலகத்தின் வாயிற்கதவுகள்.
 6.உன்னைப் பற்றி முழுதாக அறிந்திருந்தும் உன்னை விரும்புபவனே உன் நண்பன்.

7.புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளுங்கள்; பழைய நண்பர்களைத் தொடர்பில் வைத்துக் கொள்ளுங்கள். - புதியவர்கள் வெள்ளி என்றால் பழையவர்கள் தங்கம்.

8.நட்பு என்றும் தோல்வி அடைவதில்லை. தவறு
 செய்வதும் இல்லை.

9.உங்களுக்கு நீங்களே கொடுத்துக் கொள்ளும் சிறந்த பரிசுதான் நட்பு.

10.பிரச்னைகளே இல்லாமல் கூட இருந்து விடலாம். ஆனால் உலகத்தில் நண்பர்கள் இல்லாமல் இருக்க முடியாது.

No comments:

Post a Comment