பூமி மீது மோத வந்த சிறுகோள்
பூமியின் சுற்றுவட்ட பாதையில் பல சிறுகோள்களும் விண்கற்களும் கடந்து செல்கின்றன. இதுபோன்ற சிறிய கோள்கள் அவ்வப்போது பூமியை கடந்து செல்வதுடன், அரிதாக மோதுகின்றன. இந்த நிலையில், பூமியை மிக நெருக்கமாக பெரிய சிறுகோள் ஒன்று கடந்து சென்றதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை பூமிக்கு மிக நெருக்கமாக வந்த சிறுகோள்களில் இதுவும் ஒன்று எனக்கூறிய விஞ்ஞானிகள் தகவல் தொடர்புக்காக நிலைநிறுத்தப்பட்டுள்ள செயற்கை கோள்களுக்கு மிக அருகாமையில் அதாவது 3,600 கி.மீட்டர் தொலைவில் கடந்து சென்றதாக நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
11 அடி முதல் 28 அடி கொண்டதாக இந்த சிறுகோள் பூமி மீது மோதுவதற்கும் எந்த வாய்ப்பும் இல்லை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்தனர். ஒருவேளை பூமிக்கு நெருக்கமாக இந்த சிறுகோள் வந்தாலும் கூட வளிமண்டலத்தில் எரிந்து சாம்பலாகிவிடும். மீதமுள்ளவை விண்கற்களாக மட்டுமே பூமி மீது விழ வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர். 2023 BU - என்று அழைக்கப்படும் இந்த சிறுகோள் 11 அடி முதல் 28 அடி கொண்டதாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் மதிப்பிட்டனர்.
Y
Thanks OneIndia Tamil
No comments:
Post a Comment